7000mAh பேட்டரி, பிளாட் டிஸ்பிளே, பெரிஸ்கோப் ஜூம் கேமராவுடன் VIVO-வின் புதிய மினி போன்.. என்ன மாடல்?
மொபைல் சந்தையில் "காம்பெக்ட் ஸ்மார்ட்போன்" (Compact Smartphone) என்கிற வார்த்தைக்கும், "மினி ஸ்மார்ட்போன்" (Mini Smartphone) என்கிற டிசைனுக்கும் திடீர் வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்தியாவில் காம்பாக்ட் ஸ்மார்ட்போன் என்கிற கான்செப்டை ஓவர் நைட்டில் விளம்பரப்படுத்திய பெருமை - ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு தான் சேரும். இந்நிறுவனம் "ஸ்மால்" என்பதை குறிக்கும் "எஸ்" என்கிற வார்த்தையை சேர்த்து ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13எஸ் வருகிற ஜூன் 12 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் விவோ நிறுவனமும் ஒரு மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது; அதுவும் 7000எம்ஏஎச் பேட்டரி உடன்! என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது விவோய் எக்ஸ்300 ப்ரோ மினி (Vivo X300 Pro Mini) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது ஒரு வலுவான ஸ்மால் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Small Flagship Smartphone) ஆக உருவாகி வருகிறது. முன்னதாக அறிமுகமான விவோ எக்ஸ்200 ப்ரோ மினி மாடலுடன் ஒப்பிடும் போது இது 2 முக்கியமான அப்கிரேட்களை பெறும்.
ஒன்று - இந்த ஸ்மார்ட்போன் "சமச்சீர்" ஆன பெசல்களுடன் கூடிய 6.3-இன்ச் பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். அதாவது கடந்த ஆண்டு அறிமுகமான விவோ எக்ஸ்200 ப்ரோ மினியை போன்ற வடிவமைப்பை தக்கவைக்கும் ; ஆனால் கர்வ்டு எட்ஜ்களை கொண்டிருக்காது.
இரண்டாவது - விவோ எக்ஸ்300 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி மாடலில் 5,700mAh பேட்டரி தான் உள்ளது; ஆக உண்மையாகவே இதுவொரு மிகப்பெரிய பாய்ச்சல் ஆக இருக்கும்!
கேமராவை பொறுத்தவரை விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனானது விவோ எக்ஸ்200 ப்ரோ மினி மாடலை போலவே தான் இருக்கும். இது மீண்டும் ஒரு பெரிஸ்கோப் ஜூம் கேமராவை பேக் செய்யும். கவனிக்கப்பட வேண்டிய மற்ற மாற்றங்களை பொறுத்தவரை புதிய மாடல் ஆப்டிகல் அண்டர்-ஸ்கிரீன் ஸ்கேனரிலிருந்து அல்ட்ராசோனிக் ஸ்கேனருக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது துல்லியத்தையும் வேகத்தையும் மேம்படுத்தும்!
விவோ எக்ஸ்300 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் விவோவின் வழக்கமான வெளியீட்டு அட்டவணையின் அடிப்படையில் இது அக்டோபர் 2025 இல் அறிமுகம் செய்யப்படலாம். பெரும்பாலும் இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்; ஆனால் இதே பெயரின் கீழ் வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை, சலுகைகள் குறித்த விவரங்கள்: ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12GB + 256GB ஆப்ஷன் ரூ.54,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள 12GB + 512GB ஆப்ஷன் ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பிளாக் வெல்வெட், க்ரீன் சில்க் மற்றும் பிங்க் சாடின் 3 ஆகிய கலர்களில் வாங்க கிடைக்கும். ஹைஹர் வெர்ஷன் ஆனது பிளாக் மற்றும் க்ரீன் கலர்களில் மட்டுமே வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 12 ஆம் தேதி முதல் அமேசான், ஒன்பிளஸ் இந்தியா இ-ஸ்டோர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 13எஸ் ப்ரீ-ஆர்டர்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ.5,000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.5,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளையும் பெறலாம் மற்றும் 9 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தையும் பெறலாம்.


Click it and Unblock the Notifications