200எம்பி கேமரா கொண்ட 5ஜி போனை களத்தில் இறக்க போகும் Vivo.. 6500mAh பேட்டரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த போனின் டிஸ்பிளே, சிப்செட், கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300 ப்ரோ அம்சங்கள் (Vivo X300 Pro Specifications): 6.78-இன்ச் டிஸபிளே உடன் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

50எம்பி சோனி எல்ஒய்டி-828 மெயின் கேமரா + 50எம்பி சாம்சங் ஜேஎன்5 அல்ட்ரா வைடு லென்ஸ் + 200எம்பி சாம்சங் எச்பிபி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளன. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த விவோ ஸ்மார்ட்போன் ஆனது மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கார்டு ஆதரவும் உள்ளது. அதேபோல் இந்த போன் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது. பின்பு யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வசதியும் இந்த போனில் உள்ளது.
ஒரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனில் V3 மற்றும் VS1 இமேஜ் பிராசஸிங் சிப் வசதி உள்ளது.
அதேபோல் டைமன்சிட்டி 9500 (Dimensity 9500) சிப்செட் வசதியுடன் விவோ எக்ஸ்300 ப்ரோ போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப் மற்றும் வீடியோ எடிட்டிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
6500mAh பேட்டரி வசதியுடன் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
குறிப்பாக விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications