வாடா செல்லம்.. இந்தியாவே வெயிட்டிங்.. 7000mAh பேட்டரி.. சோனி கேமரா.. புது Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எகஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய விவோ போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவரும். இந்நிலையில் விவோ எகஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுக தேதி, அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300 ப்ரோ அம்சங்கள் (Vivo X300 Pro Specifications): 50எம்பி சோனி எல்ஒய்டி-828 (Sony LYT-828) பிரைமரி கேமரா + 200எம்பி பெரிஸ்கோப் லென்ஸ் (periscope lens) + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இந்த புதிய விவோ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவுடன் இந்த விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அட்டகாசமான படங்களை எடுக்க முடியும்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் (MediaTek Dimensity 9500 chipset) உடன் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த டைமன்சிட்டி சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதுவும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இம்மார்டலிஸ் டிரேஜ் ஜிபியு (Immortalis-Drage GPU) கிராபிக்ஸ் கார்டு வசதி கொண்டுள்ளது இந்த விவோ போன். இதுதவிர பல்வேறு கேமிங் அம்சங்கள் இந்த புதிய விவோ எக்ஸ்300 ப்ரோ போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த விவோ போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியடன் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒஎல்இடி டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்இ 4500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை திரை அனுபவத்தை வழங்கும்.
7000mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
எப்போது அறிமுகம்? ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 2025 அக்டோபர் மாதம் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த விவோ எக்ஸ்300 ப்ரோ போன் ரூ.99,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








