டிசம்பர் 2 உறுதி.. இந்தியாவுக்கு வரும் புது Vivo போன்.. 200எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் சமீபத்தில் விவோ எக்ஸ்300 ப்ரோ (vivo X300 Pro) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனுடன் விவோ எஸ்300 (vivo X300) ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும். குறிப்பாக இந்த விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்300 ப்ரோ அம்சங்கள் (vivo X300 Pro Specifications): 6.78-இன்ச் 1.5கே எல்டிபிஒ AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming), ஆர்மர் கிளாஸ் புரொடெக்சன் (Armor Glass protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் பிராசஸர் (Octa-Core Dimensity 9500 3nm processor) இந்த விவோ போனில் உள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் ஏஆர்எம் மாலி-ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali-G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.
ZEISS கேமரா அமைப்பு இந்த போனில் உள்ளது. அதுவும் OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் Sony LYT828 சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி Samsung HPB ZEISS APO டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் ஆப்டிகல் ஜூம், டெலிபோட்டோ மேக்ரோ, வி3 பிளஸ் டூயல் இமேஜிங் சிப் போன்ற ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த போனில் உள்ளன.
அதேபோல் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) வசதிகளும் இந்த விவோ போனில் உள்ளன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் விவோ எக்ஸ்300 ப்ரோ இருக்கிறது.
குறிப்பாக 6510mAh பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 ப்ரோ. இந்த போனின் பேட்டரி நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், கலிலியோ, குளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்எசி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன. இந்த விவோ ஸ்மார்ட்போனின் எடை 226 கிராம் ஆகும். இந்தியாவில் ரூ.66.015-விலையில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








