டிச.2 வரை எந்த லேட்டஸ்ட் போனும் வாங்கிடாதீங்க.. OnePlus, iQOO, Realme ஒத்து.. இந்த புது VIVO போன் தான் கெத்து!
ஒன்பிளஸ், ஐக்யூ, ரியல்மி என பல நிறுவனங்கள் அடுக்கடுக்காக தங்களது லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களை 2025 நவம்பரில் அறிமுகம் செய்யும் (அறிமுகம் செய்யவுள்ள) நிலையில்.. விவோ (Vivo) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் கேமரா ஸ்மார்ட்போன்கள் ஆன விவோ எக்ஸ்300 சீரீஸ் (Vivo X300 Series) மாடல்களை வருகிற 2025 டிசம்பர் 2 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே (கடந்த மாதம்) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால், இதன்கீழ் விவோ எக்ஸ்300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஆகிய 2 மாடல்கள் இடம்பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம். சந்தேகம் என்னவென்றால் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பது தான்!

ஏனென்றால் ஒன்பிளஸ் 15, ஐக்யூ 15, ரியல்மி ஜிடி 8 ப்ரோ என பல பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் போட்டிக்கு உள்ளன. இதற்கிடையில் தான் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வழியாக விவோ எக்ஸ்300 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் லீக் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.75,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த விலை துல்லியமாக இருந்தால் இது ஒன்பிளஸ் 15 (ரூ.72,999) உடன் கடும் போட்டியாக இருக்கும். விவோ எக்ஸ்300 ஆனது 12GB + 512GB மற்றும் 16GB + 512GB ஆப்ஷன்களிலும் அறிமுகமாகும்; இவைகளின் விலைகள் முறையே ரூ.81,999 மற்றும் ரூ.85,999 ஆக இருக்கலாம்
மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,09,999 என நிர்ணயிக்கப்படலாம். இது இந்த ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16GB ரேம் + 512GB ஆப்ஷனின் விலையாக இருக்கலாம். விவோ எக்ஸ்300 சீரீஸ்க்கான டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட்டை பொறுத்தவரை, டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இதன் விலை ரூ.20,999 ஆக இருக்கலாம்.
விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்
விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே ஓஎஸ், சிப், செல்பீ கேமரா, கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அம்சங்களை கொண்டுள்ளது
- சிறிய 6.31-இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக 5,360mAh பேட்டரி
- ட்ரிபிள் ரியர் கேமரா தான் ஆனால் இது OIS உடன் 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவை கொண்டுள்ளது
- அளவில் சிறியதாக இருப்பதால் இந்த போன் அளவீட்டில் 150.57×71.92×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 190 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








