Home
Mobile

டிச.2-ல் இந்தியாவுக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. 6040mAh பேட்டரி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்300 (vivo X300) ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை தற்போது பார்க்கலாம்.

விவோ எக்ஸ்300 அம்சங்கள் (vivo X300 Specifications): ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் பிராசஸர் (Octa-Core Dimensity 9500 3nm processor) உடன் இந்த விவோ போன் வெளிவரும். ஏஆர்எம் மாலி-ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali-G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. ஒரிஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

டிச.2-ல் இந்தியாவுக்கு வரும் புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

6.31-இன்ச் 1.5கே எல்டிபிஒ AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming), ஆர்மர் கிளாஸ் புரொடெக்சன் (Armor Glass protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் ZEISS கேமரா அமைப்புடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். OIS ஆதரவு கொண்ட 200எம்பி மெயின் Samsung HPB சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி Sony LYT602 ZEISS APO டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், டெலிபோட்டோ மேக்ரோ, வி3 பிளஸ் டூயல் இமேஜிங் சிப் போன்ற ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக ZEISS கேமரா அமைப்புடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. அதுவும் OIS ஆதரவு கொண்ட 200எம்பி மெயின் Samsung HPB சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி Sony LYT602 ZEISS APO டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், டெலிபோட்டோ மேக்ரோ, வி3 பிளஸ் டூயல் இமேஜிங் சிப் போன்ற ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த போனில் உள்ளன.

விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் 6040mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனின் பேட்டரி நாள் முழுவதும் பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், கலிலியோ, குளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்எசி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.55,000 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 price and features leaked ahead of December 2nd launch: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X