Home
Mobile

ப்பா.. என்னா காம்பினேஷன்.. 200MP கேமரா, 7000mAh பேட்டரி, 1.5K OLED டிஸ்பிளே.. Vivo-வின் புதிய Max போன்!

விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ்200டி மாடலின் விற்பனை இன்று (பிப்.3) தான் தொடங்கியுள்ளது. அதற்குள் விவோவின் எக்ஸ் சீரீஸின் கீழ் வரும் அடுத்த 2 புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் குறித்த விவரங்கள் லீக் ஆக்கியுள்ளன.

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள லேட்டஸ்ட் லீக்கின்படி விவோ எக்ஸ்300 மேக்ஸ் (Vivo X300 Max) மற்றும் விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஆகிய 2 மாடல்களும் அறிமுகத்திற்கு தயாராகி வருகின்றன.

ப்பா.. என்னா காம்பினேஷன்.. 200MP கேமரா, 7000mAh பேட்டரி!

விவோ எக்ஸ்300 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது மிக மெல்லிய பெசல்களை கொண்ட டிசைன் உடன் 6.78-இன்ச் OLED 1.5K பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கூடவே இதன் டிஸ்பிளேவில்அல்ட்ராசோனிக் இன் டிஸ்பிளே பிங்கர் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இடம்பெறலாம்

கேமராக்களை பொறுத்தவரை இது 200-மெகாபிக்சல் ப்ரைமரி, அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் ஒரு மிட்-டையர் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஆகிய கேமராக்களை ஒரு வட்ட வடிவிலான கேமரா மாட்யூலுக்குள் உள்ளடக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது டைமன்சிட்டி 9500 சிப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை இது மிகப்பெரிய 7,000mAh பேட்டரியை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை மற்றும் ஆபர் விவரங்கள்: பேஸிக் 12GB ரேம் + 256GB ஆப்ஷனின் விலை ரூ.59,999 என்றும், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.69,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் Flipkart, Vivo-வின் e-store மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனை வாங்கலாம். விற்பனை சலுகைகளை பொறுத்தவரை ரூ.5,000 வரை உடனடி தள்ளுபடி அல்லது எக்ஸ்சேன்ஜ் ஆபர்களை விவோ அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Seaside Lilac மற்றும் Stellar Black ஆகிய 2 கலர்களில் வருகிறது.

விரைவில் வரும் விவோ வி70 சீரீஸ் (Vivo V70 Series) ஸ்மார்ட்போன்கள்: இந்த சீரீஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை விவோ நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சீரிஸின் கீழ் விவோ வி70 (Vivo V70) மற்றும் விவோ வி70 எலைட் (Vivo V70 Elite) என்கிற 2 மாடல்களும் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவோ வி70 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு பிரத்யேக மைக்ரோசைட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்னாப்டிராகன் (Snapdragon) சிப்செட்களால் இயக்கப்படும் என்பதும், விவோ வி70 மற்றும் விவோ வி70 லைட் ஆகிய இரண்டுமே ஸெய்ஸ் (Zeiss) ரியர் கேமரா செட்டப்பை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது

எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, விவோ வி70 ஸ்மார்ட்போன் ஆனது 6.59-இன்ச் 1.5K டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். விவோ வி70 சீரீஸில் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி இடம்பெறலாம் மற்றும் இது IP68 + IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்களுடன் வரலாம்

கேமராக்களை பொறுத்தவரை விவோ வி70 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி IMX882 ப்ரைமரி ரியர் கேமரா, 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் குறிப்பிடப்படாத அல்ட்ராவைடு கேமரா ஆகியவற்றை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலம்.

இவ்விரு ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் உறுதி செய்யப்பட்டு விட்டாலும் கூட, விவோ நிறுவனம் சரியான வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை, இது வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை விவோ வி70 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்தியாவில் ரூ.55,000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 Max With 200MP Camera 7000mAh battery Launching Soon Alongside Vivo X300 Ultra Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X