அதிரவிடும் விலை.. அறிமுகமானது புது Vivo 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்300 (vivo X300) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 200எம்பி கேமரா, 90W சார்ஜிங், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300 அம்சங்கள் (vivo X300 Specifications): 6.31-இன்ச் 1.5கே எல்டிபிஒ AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming), ஆர்மர் கிளாஸ் புரொடெக்சன் (Armor Glass protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் பிராசஸர் (Octa-Core Dimensity 9500 3nm processor) உடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் ஏஆர்எம் மாலி-ஜி1 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali-G1 Ultra MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது. ஒரிஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.
ZEISS கேமரா அமைப்புடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. அதுவும் OIS ஆதரவு கொண்ட 200எம்பி மெயின் Samsung HPB சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி Sony LYT602 ZEISS APO டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், டெலிபோட்டோ மேக்ரோ, வி3 பிளஸ் டூயல் இமேஜிங் சிப் போன்ற ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதிகளும் இந்த போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) வசதிகளும் இந்த விவோ போனில் உள்ளன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் விவோ எக்ஸ்300 இருக்கிறது.
6040mAh பேட்டரி வசதியுடன் விவோ எக்ஸ்300 அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனின் பேட்டரி நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், கலிலியோ, குளோனாஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்எசி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த விவோ ஸ்மார்ட்போனின் எடை 190 கிராம் ஆகும். வரும் அக்டோபர் 17-ம் தேதி விவோ எக்ஸ்300 சீனாவில் விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும்.
விவோ எக்ஸ்300 விலை:
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 மாடலின் விலை 4,399 yuan (இந்திய மதிப்பில் ரூ.54,800)
16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 மாடலின் விலை 4,699 yuan (இந்திய மதிப்பில் ரூ.58,540)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 மாடலின் விலை 4,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.62,280)
16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 மாடலின் விலை 5,299 yuan (இந்திய மதிப்பில் ரூ.66,015)
16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 மாடலின் விலை 5,799 yuan (இந்திய மதிப்பில் ரூ.72,240)


Click it and Unblock the Notifications








