Home
Mobile

சம்பவம் உறுதி.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 6040mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் மிட்-பிரீமியம் மாடலான விவோ எக்ஸ்300 (Vivo X300) இன்று வெளியாக இருக்கிறது. காம்பாக்ட் டிசைனில் 6040mAh பேட்டரி கொண்ட மாடலாக களமிறங்க இருக்கிறது. அதேபோல கேமராவிலும் பின்னியெடுக்க இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம், பட்ஜெட் எப்படி இருக்கும், உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் இன்றிரவு 7 மணிக்கு விவோ எக்ஸ்300 சீரிஸ் வெளியாகிறது. இதில் விவோ எக்ஸ்300 மட்டுமல்லாமல், விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) மாடலும் வெளியாக இருக்கிறது. ஆனால், காம்பாக்ட் மாடலை விரும்பும் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனானது, மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது. முதலில் பீச்சர்களை பார்க்கலாம்.

சம்பவம் உறுதி.. 200MP கேமரா.. 12GB ரேம்.. 6040mAh பேட்டரி.. மாடல்?

விவோ எக்ஸ்300 அம்சங்கள் (Vivo X300 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த பிஓஈ கியூ10பிளஸ் (BOE Q10+) மாடலில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. இந்த 6.31 இன்ச் டிஸ்பிளே கொண்ட காம்பாக்ட் பாடியிலும் 6,040mAh பேட்டரி கொடுக்க இருக்கிறது.

இந்த பேட்டரிக்கு 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.95 எம்எம் தடிமன் மற்றும் 190 கிராம் எடை கொடுக்க இருக்கிறது. இந்த விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி சிப்செட் வருகிறது.

ஆகவே, ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (Octa Core MediaTek Dimensity 9500) சிப்செட் கிடைக்க இருக்கிறது. இந்த விவோ ஸ்மார்ட்போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டும் களமிறங்க இருக்கிறது.

இந்த விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. சாம்சங் எச்பிபி (Samsung HPB) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 200 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. மேலும், சாம்சங் ஜேஎன்1 சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுக்கிறது.

இதுபோக சோனி எல்ஒய்டி 602 (Sony LYT 602) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்க இருக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் லைனயர் மோட்டார் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.

ரூ.70,000 பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சீன வெளியீட்டுக்கு பிறகு, குளோபல் மற்றும் இந்திய வெளியீட்டை எதிர்பார்க்கலாம். விவோ எக்ஸ்200 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. இந்த விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் ஃப்ரீடம் ப்ளூ (Freedom Blue), லீசர் பர்பிள் (Leisure Purple), ப்யூர் பிளாக் (Pure Black) உள்ளிட்ட கலர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 Launch Today Compact Flagship With 6.31 inch Display 200MP Camera What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X