வந்தாச்சு புது வேரியண்ட்.. 6500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்ட்டின் விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
டிஎஸ்எல்ஆர் கேமரா மாடல்களுக்கு நிகரான அவுட்புட் கொடுக்கும்படி விவோ ஜீஸ் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் ஜென் 2 (Vivo ZEISS Telephoto Extender Gen 2) கிட்டுடன் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாகியது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மட்டுமே வெளியாகியது.

8 ஜிபி ரேம் வேரியண்ட் வெளியாகாததால், அதன் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது, விவோ நிறுவனமானது, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. ரூ.84,999 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. 10 சதவீத பேங்க் டிஸ்கவுண்ட், 24 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகைகள் கிடைக்கிறது.
மேலும், 10 சதவீத எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட்டை எஸ்பிஐ, எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் கார்டுகளை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். பிளிகார்ட், அமோசான் மற்றும் விவோ இந்தியா ஸ்டோர் ஆகியவற்றில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மெயின்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. பீச்சர்களில் மாற்றமில்லை.
விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE Specifications): 6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 5000 நிட்ஸ் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) மற்றும் அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த விவோ எக்ஸ்300 எப்இ போன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைப்பதால், 5 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம்.
7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும். ஓர்ஜின் ஓஎஸ் 6 கிடைப்பதால், ஓர்ஜின் ஐலேண்ட் (Origin Island) மற்றும் விவோ ஆபீஸ் கிட் (vivo Office Kit) கிடைக்கிறது. ஷேக் & ஷேர் (Shake & Share) போன்ற பிரத்யேக பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உள்ளது.
மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. டெலிபோட்டோ கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் ஆட்டோ போகஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரியை இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 40W வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. லைலாக் பர்பிள், அர்பன் ஆலிவ் மற்றும் நோய்ர் பிளாக் கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications