விவோ அறிமுகம் செய்த புதிய 5ஜி போான்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போனை இன்று மே (6) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE specifications): 6.31-இன்ச் எல்டிபிஒ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,216×2,640 பிகச்ல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6)மூலம் இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (3nm octa core Snapdragon 8 Gen 5 chip) வசதி விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
6500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட்சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளன. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த போனில் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 6.0, என்எப்சி, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) போன்ற பல வசதிகள் இந்த போனில் உள்ளன.

விவோ எக்ஸ்300 எப்இ விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 எப்இ மாடலின் விலை ரூ.79,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 எப்இ மாடலின் விலை ரூ.89,999-ஆக உள்ளது.
விவோ ZEISS டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் அக்சஸரீஸ் கிட் (vivo ZEISS Telephoto Extender Accessories Kit) விலை ரூ.3,999-ஆக உள்ளது.
விவோ ZEISS டெலி போட்டோ எக்ஸ்டெண்டர் ஜென் 2(vivo ZEISS Telephoto Extender Gen 2) விலை ரூ.15,999-ஆக உள்ளது.
விவோ எக்ஸ்300 எப்இ + எக்ஸ்டெண்டர் + அக்சஸரீஸ் கிட் விலை ரூ.99,997-ஆக உள்ளது.
பிளிப்கார்ட், விவோ ஆன்லைன் ஸ்டோர். அமேசான் தளங்களில் தற்போது இந்த போன் முன்பதிவு செய்யக் கிடைக்கிறது. வரும் மே 14-ம் தேதி இந்த விவோ போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications