Home
Mobile

மே.6-க்கு அப்புறம் இதுதான்.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 6 வருட ஓஎஸ்.. 50MP ZEISS கேமரா.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் இருக்கும் கேமரா பிரியர்களை தட்டித் தூக்கும்படி விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. கேமரா பீச்சர்கள் முதல் பேட்டரி பீச்சர்கள் வரையில் உறுதி செய்யப்பட்டுவிட்டன. வெளியீட்டுக்கு முன்பாக என்னென்ன பீச்சர்களை தெரிந்து கொள்ள வேண்டும்?

வருகிற மே 6ஆம் தேதி இந்திய மார்கெட்டில் விவோ எக்ஸ்300 எப்இ வெளியாக இருக்கிறது. விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் அதே தேதியில வெளியாக இருக்கிறது. ஆனால், மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் விவோ எக்ஸ்300 எப்இ கிடைக்க இருப்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. முழு பீச்சர்கள் அப்படி இருக்கிறது.

மே.6-க்கு அப்புறம் இதுதான்.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. மாடல்?

விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட்டை இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் வெளியாக இருப்பதால், 5 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்களை கொடுத்துள்ளது.

மேலும், 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்க இருக்கின்றன. ஓர்ஜின் ஓஎஸ் (Origin OS) கிடைக்கிறது. ஆகவே, ஓர்ஜின் ஸ்மூத் என்ஜின் (Origin Smooth Engine), அல்ட்ரா கோர் கம்ப்யூட்டிங் (Ultra-Core Computing), மெமரி ப்யூஷன் (Memory Fusion), டூயல் ரென்டரிங் (Dual Rendering) கிடைக்கிறது. மேலும், விவோ ஆபிஸ் கிட் (vivo Office Kit) கிடைக்கிறது.

ப்ரீ டிரான்ஸ்பர் (Free Transfer), ஷேக் & ஷேர் (Shake & Share) உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன. சோனி ஐஎம்எக்ஸ்921 (SONY IMX921) சென்சாருடன் 50 எம்பி ஜீஸ் மெயின் கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜியுடன் (OIS) 50 எம்பி ஜீஸ் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

மேலும், 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) கிடைக்கிறது. 8 எம்பி ஜீஸ் அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50எம்பி ஜீஸ் அல்ட்ரா வைடு செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode), ஏஐ கிரியேட்டிவ் கேமரா (AI Creative Camera) பீச்சர்கள் உள்ளன.

ஜீஸ் மல்டிஃபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், விவோ ஜீஸ் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் ஜென் 2 (Vivo ZEISS Telephoto Extender Gen 2) கிடைக்கிறது. ஆகவே, டிஎஸ்எல்ஆர் லெவல் போகல் லென்த் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது.

இந்த பேட்டரிக்கு 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், ஓவர்ஹீட்டிங் புரொடெக்சன் (Over Heating Protection) கிடைக்கிறது. ஓரளவுக்கு ஸ்லிம் பாடி கொடுக்கப்படி 7.99எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. 191 கிராம் எடையை இந்த விவோ எக்ஸ்300 எப்இ கொண்டுள்ளது..

நோய்ர் பிளாக் (Noir Black), அர்பன் ஆலிவ் (Urban Olive) மற்றும் லைலாக் பர்பிள் (Lilac Purple) ஆகிய கலர்களில் இந்த விவோ எக்ஸ்300 எப்இ கிடைக்க இருக்கிறது. மே 6ஆம் தேதிக்கு முன்னதாக கிட்டத்தட்ட முழு பீச்சர்களும் வெளியாக வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இதில் பீச்சர்கள் அப்டேட் செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo X300 FE With 50MP ZEISS Telephoto Camera Launching on May 6 in India Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X