யாரு சாமி அவன்.. OLED டிஸ்பிளே.. 6500mAh பேட்டரி.. 90W பாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. 12GB ரேம்.. எந்த மாடல்?
ஆப்பிள் ஸ்மார்ட்போன்களின் டிசைனை தூக்கி சாப்பிடும்படி விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, டிஸ்பிளே, பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங், கேமரா உள்ளிட்ட பீச்சர்கள் கசிந்தன. இப்போது, ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
விவோ வி70 சீரிஸ் மாடல்களுக்கு அடுத்தபடியாக விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வந்துள்ளது. ஆகவே, மார்ச் மாதத்தில் வெளியீடு குறித்த விவரங்கள் தெரியவரும். இந்த நேரத்தில் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. விவோ எஸ்50 ப்ரோ மினி மாடலில் இருந்து மாறுபடுகிறது.

அதாவது, விவோ வி50 ப்ரோ மினி (Vivo S50 Pro Mini) ஸ்மார்ட்போனின் ரீபிராண்ட் வெர்ஷனாகவே இந்த விவோ எக்ஸ்300 எப்இ மாடல் வெளியாக இருக்கிறது. விவோ வி50 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் ப்ளூ கிடையாது. ஆனால், விவோ எக்ஸ்300 எப்இ மாடலில் ப்ளூ (Blue) இருக்கிறது. மேலும், பிளாக் (Black) கலரிலும் கிடைக்க இருக்கிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களில் கிடைக்க இருக்கிறது. இதே வேரியண்ட்களில் விவோ வி50 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் கிடைக்கிறது. இப்போது, முன்னதாக வெளியான டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE Specifications): 6.31 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. காம்பாக்ட் மாடலாக இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட்டை கொடுக்க உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமராவை இந்த விவோ எக்ஸ்300எப்இ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுத்துள்ளது. 6500mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.
மேலும், 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-screen Fingerprint Sensor) மற்றும் டூயல் ஸ்பீக்கர்களை கொடுத்துள்ளது. இதுபோக எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis linear Motor) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன.
இந்திய மார்கெட்டில் விவோ வி70 (Vivo V70) மற்றும் விவோ வி70 லைட் (Vivo V70 Lite) ஆகிய மாடல்கள் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. வழக்கமாக கிடைக்கும் ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா இந்த மாடல்களிலும் கிடைக்கிறது. ஏரோஸ்பேஸ்-கிரேடு அலுமினியம் அலாய் ஃபிரேம் கிடைக்கிறது. 4என்எம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (4nm Snapdragon 8s Gen 3) சிப்செட் உள்ளது.
3டி அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனிங் 2.0 (3D Ultrasonic Fingerprint Scanning 2.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6500mAh பேட்டரி கொடுக்க இருக்கிறது. ஐபி68 மற்றும் ஐபி69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. 1.5K அல்ட்ரா கிளியர் ஓஎல்இடி டிஸ்பிளே கொடுக்கிறது. இப்படி பல்வேறு பீச்சர்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications








