Vivo போட்ட போடு.. 6500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 40W வயர்லெஸ்.. 12GB ரேம்.. ZEISS கேமரா.. எந்த மாடல்?
இந்திய கேமரா பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படி ஜீஸ் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இப்போது, பட்ஜெட் விவரங்கள் கசிந்து, மிரளவிட்டுள்ளது. எதிர்பார்த்ததைவிட அதிமாக விலைக்கு வெளியாக இருக்கிறது.
2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் விவோ எக்ஸ்200 எப்இ (vivo X200 FE) ஸ்மார்ட்போன் வெளியாகியது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆக இருந்தது. ஆகவே, விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.60,000 முதல் ரூ.70,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை விட கூடுதல் விலைக்கு கிடைக்க இருக்கிறது.

இந்திய மார்கெட்டில் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.79,999 ஆக இருக்கப் போகிறது. ரீடெயில் பாக்ஸில் எம்ஆர்பி விலையானது ரூ.1,19,999 ஆக இருக்கிறது. ஆகவே, விவோ எக்ஸ்200 எப்இ ஸ்மார்ட்போனை விட 40 சதவீதத்துக்கும் மேலான விலையில் விவோ எக்ஸ்300 எப்இ வெளியாக இருக்கிறது.
வருகிற மே 6ஆம் தேதி விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போனும் வெளியாக இருக்கிறது. ஆகவே, அல்ட்ரா மாடலின் விலை கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தை எட்ட வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட், அமேசான், விவோ இந்தியா தளங்களில் பீச்சர்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டன.
விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE Specifications): 50 எம்பி ஜீஸ் மெயின் கேமரா + 50 எம்பி ஜீஸ் டெலிபோட்டோ கேமரா + 8 எம்பி ஜீஸ் அல்ட்ரா வைடு கேமரா கொண்ட பிரீமியம் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்921 (SONY IMX921) சென்சார் கிடைக்கிறது. டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (SONY IMX882) சென்சார் கிடைக்கிறது.
கூடுலாக ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கிடைக்கிறது. டெலிபோட்டோவாக இருப்பதால், 3X ஆப்டிகல் ஜூம் (Optical Zoom) கொடுத்துள்ளது. மேலும், 100X டிஜிட்டல் ஜூம் கொடுக்கப்பட்டு உள்ளது. மல்டிபிள் போகல் லென்த் கிடைக்கிறது. ஆகவே, விவோ ஜீஸ் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் ஜென் 2 (Vivo ZEISS Telephoto Extender Gen 2) கிடைக்கிறது.
இதற்காக ஜீஸ் மல்டிஃபோகல் போர்ட்ராய்டு (ZEISS Multifocal Portrait) பீச்சர் கிடைக்கிறது. பில்ட்-இன் போகல் லென்த்துடன் கிடைக்கிறது. முந்தைய மாடல்களில் இருந்து என்ஹான்ஸ் செய்யப்பட்ட ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode) கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ கிரியேட்டிவ் கேமரா (AI Creative Camera) கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட் கிடைக்கிறது. 5 வருடங்களுக்கு ஓஎஸ் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஓர்ஜின் ஸ்மூத் என்ஜின் (Origin Smooth Engine) மற்றும் விவோ ஆபிஸ் கிட் (vivo Office Kit) பீச்சர்களுடன் ஓர்ஜின் ஓஎஸ் (Origin OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
7.99எம்எம் தடிமன் கொண்ட பாடியில் 6500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. நோய்ர் பிளாக் (Noir Black), அர்பன் ஆலிவ் (Urban Olive) மற்றும் லைலாக் பர்பிள் (Lilac Purple) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications