மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. சோனி கேமரா.. 6500mAh பேட்டரி.. புது Vivo போன் ரெடி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த புதிய விவோ போன் வெளியாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE Specifications): 6.31-இன்ச் 1.5கே எல்டிபிஒ டிஸ்பிளே வசதியுடன் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 எஸ்ஒசி (Snapdragon 8 Gen 5 SoC) சிப்செட் உடன் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியுடன் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரிஜின் ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் வெளியாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த போன் . 4கே வீடியோ சப்போர்ட், ஆரா லைட் (Aura Light) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போனின் ரியர் கேமரா மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த செல்பி கேமராவும் 4கே வீடியோ சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த போனின் கேமரா பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம். IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் விவோ எக்ஸ்300 எப்இ போன் அறிமுகமாகும்.
விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் 6500mAh பேட்டரி கொண்டுள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.56,990 விலையில் இந்த புதிய விவோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








