Home
Mobile

அதிரவிடும் விலை.. 50எம்பி கேமரா.. IP68 ரேட்டிங்.. 6500mAh பேட்டரி.. புதிய Vivo போன் ரெடி.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போன் வரும் மே 6-ம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த விவோ எக்ஸ்300 எப்இ போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300 எப்இ போன் ரூ.79,999 விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.89,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரவிடும் விலை.. புதிய Vivo போன் ரெடி.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE specifications): 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (3nm octa core Snapdragon 8 Gen 5 chip) வசதி விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.31-இன்ச் எல்டிபிஒ அமோலெட் (LTPO AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,216×2,640 பிகச்ல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 5000 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) மூலம் இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த போன் பிரீமியம் 200mm லென்ஸான ZEISS டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் (Telephoto Extender Kit) உடன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன் 6500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 40W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரவிடும் விலை.. புதிய Vivo போன் ரெடி.. எந்த மாடல்?

IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவு இந்த போனில் உள்ளது. இன் டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor), இன்பிராரெட்சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் 6.0, என்எப்சி, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Vivo X300 FE price leaked ahead of India launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X