Home
Mobile

வெறித்தனம் சாரே.. VIVO புது போன்.. 200MP OIS கேமரா, 5360mAh பேட்டரி, IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

விவோ (Vivo) நிறுவனத்தின் பிளாக்ஷிப் கேமரா ஸ்மார்ட்போன்கள் ஆக விவோ எக்ஸ்300 சீரீஸ் (Vivo X300 Series) சீனாவில் அறிமுகமான வேகத்தில்.. இந்த சீரீஸின் கீழ் விவோ எக்ஸ்300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஆகிய 2 மாடல்களும் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற விவரங்கள் வெளியாகி உள்ளன.

இதோடு சேர்த்து விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய சந்தைக்கான ஒரு பிரத்யேக கலர் ஆப்ஷனுடன் அறிமுகமாகும் என்கிற விவரமும் வெளியாகியுள்ளது. டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரி (Tipster Sanju Choudhary) வழியாக விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் ரெட் கலர் ஆப்ஷன் லீக் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மட்டுமே வாங்க கிடைக்கும் ஒரு பிரத்யேக விருப்பமாக இருக்கும் கூறப்படுகிறது.

வெறித்தனம் சாரே.. VIVO புது போன்.. 200MP OIS கேமரா!

நினைவூட்டும் வண்ணம் விவோ எக்ஸ்300 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்300 ஆகிய இரண்டு மாடல்களும் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, நேற்று (அக்டோபர் 30) உலகளவில் அறிமுகமானன. விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் இந்த லீக்டு ரெண்டர் வழியாக,, இந்த ஸ்மார்ட்போனின் சைனீஸ் வேரியண்ட் மற்றும் க்ளோபல் வேரியண்ட் ஆகிய இரண்டுமே ஒரே மாதிரியான வடிவமைப்பை தான் கொண்டிருக்கும் என்பதை குறிக்கிறது.

விவோ நிறுவனம் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் இது 2025 டிசம்பர் மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை, சீனாவில் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,43,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.1,08,000 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி உடனான ஹை-எண்ட் வேரியண்ட் ஆனது சுமார் ரூ.1,13,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா

- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்

- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்

விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே ஓஎஸ், சிப், செல்பீ கேமரா, கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அம்சங்களை கொண்டுள்ளது
- சிறிய 6.31-இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக 5,360mAh பேட்டரி

- ட்ரிபிள் ரியர் கேமரா தான் ஆனால் இது OIS உடன் 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவை கொண்டுள்ளது
- அளவில் சிறியதாக இருப்பதால் இந்த போன் அளவீட்டில் 150.57×71.92×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 190 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 could be available in red colour Which is exclusive for Indian market Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X