மொத்த மார்கெட்.. ஒத்த போனுக்கு வெயிட்டிங்.. 200MP கேமரா.. 6040mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ எக்ஸ்300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஆகிய மாடல்களின் வெளியீட்டை உறுதி செய்தது மட்டுமல்லாமல், கேமரா கிட்களும் கிடைக்க இருப்பதை விவோ இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. சாம்சங் சென்சாருடன் 200 எம்பி மெயின் கேமரா, 6040mAh பேட்டரி, 90W சார்ஜிங் போன்ற பீச்சர்கள் பட்டையை கிளப்ப இருக்கின்றன.
ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி இந்த விவோ எக்ஸ்300 சீரிஸ் மாடல்கள் ஓரிரு வாரங்களில் இந்தியாவில் வெளியாக இருக்கின்றன. ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா மட்டுமல்லாமல், போட்டோகிராபர் கிட் (Photographer Kit) கிடைக்க இருக்கிறது. இதில் லென்ஸ் போன்ற டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிகரான செட்டப் கிடைக்க இருக்கிறது. பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன.

விவோ எக்ஸ்300 அம்சங்கள் (Vivo X300 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. மெயின் கேமராவில் சாம்சங் என்பிபி (Samsung HPB) சென்சார் மற்றும் டெலிபோட்டோவில் சோனி எல்ஒய்டி602 (Sony LYT602) சென்சார் கிடைக்க இருக்கிறது.
இதில் ஜீப் ஆப்டிக்ஸ் மற்றும் லாஸ்லெஸ் ஜூமிங் கிடைக்கிறது. ரெட் பேனல் மற்றும் மெட்டாலிக் பினிஷிங் ஃபிரேம் கிடைக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTeK Dimensity 9500) சிப்செட் மட்டுமல்லாமல், வி3+ இமேஜிங் சிப் (V3+ Imaging Chip) வர இருக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 6 (Origin OS 6) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க இருக்கிறது.
விவோ எக்ஸ்300 ப்ரோ அம்சங்கள் (Vivo X300 Pro Specifications): இந்த ப்ரோ ஸ்மார்ட்போனில் 200 எம்பி ஏபிஓ டெலிபோட்டோ (APO Telephoto Camera) கேமரா கிடைக்கிறது. இதில் சாம்சங் எச்பிபி சென்சார், ஆட்டோ போகஸ், ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது. சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா உள்ளது. இதுவொரு கிம்பல் கிரேடு கேமராவாகும். இதில் சோனி எல்ஒய்டி 828 (Sony LYT 828) சென்சார், ஆட்டோ போகஸ் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த கேமராவிலேயே போட்டோகிராபர் கிட் கிடைக்க இருக்கிறது. கோல்டர் கலரில் வெளியாக இருக்கிறது. டைமன்சிட்டி 9500 சிப், வி3+ இமேஜிங் சிப் மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 6 கிடைக்க இருக்கிறது.
இந்த கேமரா, டிசைன் மற்றும் சிப்செட் பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. இருப்பினும், இந்த விவோ எக்ஸ்300 சீரிஸ் குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஆகவே, விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் 6.31 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஆர்மர் கிளாஸ் பாதுகாப்பு கிடைக்கிறது.
6040mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. விவோ எக்ஸ்300 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 6510mAh பேட்டரி மற்றும் 90W சார்ஜிங் கிடைக்கிறது. விஎஸ்1 இமேஜிங் சிப் கூடுதலாக கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கிறது. IP69 ரேட்டிங் கொடுக்கிறது.
விவோ எக்ஸ்300 மாடலின் ஆரம்ப விலை ரூ.55,000 பட்ஜெட்டிலும், எக்ஸ்300 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.66,000 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இது சீன மார்கெட்டின் விலையாக இருக்கிறது. இந்தியாவில் இதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். ஆனால், கேமரா கிட் கூடுதல் விலைக்கு மட்டுமே கிடைக்கும். ஸ்மார்ட்போனுடன் வராது.


Click it and Unblock the Notifications








