வியக்கவைக்கும் விலையில் விவோ எக்ஸ்23 ஸ்டார் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது,தற்சமயம் அந்நிறுவனம் சீனாவில் விவோ எக்ஸ்23 ஸ்டார் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த
ஸ்மார்ட்போன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

விவோ எக்ஸ்23 ஸ்டார் எடிஷன் சாதனத்தில் இன்-டிஸ்பினே-கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் விவோ லோகோ மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

டிஸ்பிளே:
விவோ எக்ஸ்23 ஸ்டார் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.41-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது.

சிப்செட்:
விவோ எக்ஸ்23 ஸ்டார் எடிஷன் ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இந்த சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக வரும் நவம்பர் மாதம் இந்த ஸ்மார்ட்போன்
மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
விவோ எக்ஸ்23 ஸ்டார் எடிஷன் ஸ்மார்ட்போனில் 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 12எம்பி
செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.37,010-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications