Home
Mobile

வியக்கவைக்கும் விலையில் அசத்தலான விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இக்கருவி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

By Prakash S

நேற்று இந்தியாவில் விவோ 11ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ததை தொடர்ந்து, தற்சமயம் சீனாவில் விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். மேலும் வரும் 14-ம் தேதி முதல் சீனாவில்
விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியக்கவைக்கும் விலையில் அசத்தலான விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை சிவப்பு, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

விவோ எக்ஸ்23:

விவோ எக்ஸ்23:

விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.41-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம்:

8ஜிபி ரேம்:

இக்கருவி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு கூட மிக அருமையாக இருக்கும் என இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்:

விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போன் பொதுவாக 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 670 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி
செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஏஆர் ஸ்டிக்கர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விலை:

விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.36,830-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X23 launched with in-display fingerprint scanner and Snapdragon 670: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X