பட்ஜெட் விலையில் ஐபோன் X-க்கு சரியான அடி; நாளை முதல் ப்ளிப்கார்டில்.!
பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட்டில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் விவோ X2-ன் அம்சங்கள் என்னென்ன.? விலை நிர்ணயம் என்ன.?
மிகவும் எதிர்பார்க்கப்படும் விவோ X21 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டிற்கு, இன்னும் ஒரு நாள் மட்டுமே இடைவெளி இருக்கிறது. முதலில் சீனாவில் தொடங்கப்பட்டது, அதனை தொடர்ந்து சிங்கப்பூரில் வெளியானது அடுத்ததாக இந்தியா சந்தையை அடைகிறது.

ஏற்கனவே வெளியாகிவிட்டதால் இந்த ஸ்மார்ட்போனைப் பற்றி எங்களுக்கு நிறையவே தெரியும். இந்த ஸ்மார்ட்போனின் மிகவும் உற்சாகமான அம்சம் அதன் டிஸ்பிளேவும் மற்றும் அதில் கட்டமைக்கப்பட்ட 'அண்டர்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்பமும் தான் ஆகும். பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட்டில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் விவோ X2-ன் அம்சங்கள் என்னென்ன.? விலை நிர்ணயம் என்ன.? என்பதை விரிவாக காண்போம்.

டிஸ்பிளே.!
விவோ X21 ஆனது அதன் டிஸ்பிளேவில் ஒரு 3D கண்ணாடி உடல் வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் விளைவாக, இந்த ஸ்மார்ட்போன் 85.2% என்கிற ஒரு சுவாரஸ்யமான ஸ்க்ரீன்-டூ-படி விகிதத்தை வழங்குகிறது. அதாவது இது 6.28 இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் ஒரு முழு HD+ அளவிலான 1080 x 2280 தீர்மானம் மற்றும் 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் ஆகியவைகளை கொண்டிருக்கும்.

சேமிப்பு.!
ஒரு இடைப்பட்ட ஸ்னாப்டிராகன் 660 Octa-core செயலி உடனாக ஒரு Adreno 512 ஜிபியூ கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், மேற்கூறியபடி 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என்கிற சேமிப்பு வகைகளின் கீழ் 6 ஜிபி ரேம் கொண்டு இயங்கும். உள்ளக சேமிப்பிடத்தை விரிவாக்கும் திறனுடன் ஹைபிரிட் டூயல் சிம் ஆதரவும் கொண்டிருக்கும்.

கேமரா.!
இமேஜிங் துறையை பொறுத்தவரை, Vivo X21 அதன் பின்புறத்தில் ஒரு 12 எம்பி + 5 எம்பி என்கிற இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 24 எம்பி ரெசல்யூஷன் அளவிலான புகைப்படங்களை கைப்பற்றும் திறன் கொண்ட ஒரு 12 எம்பி செல்பீ உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த ஆடியோ தரத்திற்கான AK4376A Hi-Fi ஆடியோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.

விலை நிர்ணயம்.!
விவோ X21 எனும் ஸ்டான்டர்ட் எடிஷன் ஆனது இரண்டு சேமிப்பு கட்டமைப்புகளில் கிடைக்கும். 6ஜிபி அளவிலான ரேம் உடனான 64 ஜிபி மாடல் ஆனது ரூ.29,900/-க்கும், மறுகையில் உள்ள 128ஜிபி சேமிப்பு மாடல் ஆனது ரூ.33,000/-க்கும் இந்திய சந்தையை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பதிவு.! இதற்கிடையில் விவோ நிறுவனம், சத்தமின்றி X21 ஸ்மார்ட்போனின் முன்பதிவை திறந்தும் விட்டுள்ளது. இந்த ப்ரீ-புக்கிங் வாய்ப்பின் கீழ், ரூ.2000/- முன்பணம் செலுத்தி முன்பதிவை நிகழ்த்திக்கொள்ளலாம். பின்னர் மீதமுள்ள தொகையை நாளை கொள்முதலின் போது செலுத்தவேண்டும். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யவும். https://shop.vivo.com/in/product/phone
இதற்கிடையில் விவோ நிறுவனம், சத்தமின்றி X21 ஸ்மார்ட்போனின் முன்பதிவை திறந்தும் விட்டுள்ளது. இந்த ப்ரீ-புக்கிங் வாய்ப்பின் கீழ், ரூ.2000/- முன்பணம் செலுத்தி முன்பதிவை நிகழ்த்திக்கொள்ளலாம். பின்னர் மீதமுள்ள தொகையை நாளை கொள்முதலின் போது செலுத்தவேண்டும். முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் இந்த இணைப்பை கிளிக் செய்யவும். https://shop.vivo.com/in/product/phone

ஓஎஸ் மற்றும் பேட்டரி.!
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவை அடிப்படையாக கொண்ட Funtouch OS 4.0 கொண்டு இயக்கப்படும் இந்த விவோ X21 ஆனது, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான ஒரு 3200mAh திறன் கொண்ட பேட்டரி மூலம் ச்கதியூட்டப்படுகிறது. மேலும் பல விவோ ஸ்மார்ட்போன்கள் சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications