Just In
- 18 hrs ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 19 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 19 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 20 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- News
டெல்லியை அடுத்து உ.பியிலும் பரபரப்பு.. அலிகார் பல்கலைக்கழகத்தில் போலீஸ்.. மாணவர்கள் மீது தடியடி!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Movies
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Lifestyle
இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த 6 காரணங்களுக்காக விவோ X21 செல்போனை நம்பி வாங்கலாம்.!
விவோ அதன் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றின் அறிமுகத்தை வழியாக, ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புரட்சியை கிளப்பி விட்டுள்ளது. அந்த ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் ஆன விவோ X21 ஆகும். விவோ X21 தான் எதிர்காலத்திலான டிஸ்பிளே கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய உலகின் முதல் வணிக ஸ்மார்ட்போன் ஆகும். இது மொபைல் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்திற்க்கான ஒரு தெளிவான கண்ணோட்டத்தைக் கொடுக்கிறது.
இது 2018 ஆம் ஆண்டில் வரவிருக்கும் முக்கிய ஸ்மார்ட்போன்களின் பிரதான அம்சமாகவும் மற்றும் இந்த தொழில்நுட்பம் முன்னோக்கி செல்லும் பாதையையும் அமைக்கிறது. ஆனால் விவோ X21 ஸ்மார்ட்போன் ஆனது வெறும் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் அம்சம் பற்றியது மட்டுமல்ல.
இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக, இதன் ஒட்டுமொத்த மல்டிமீடியா தொகுப்பு மற்றும் ஒரு பெரிய முழு எச்டி+ AMOLED டிஸ்பிளே, மெல்லிய கண்ணாடி உலோக வடிவமைப்பு மற்றும் பெஸ்ட்-இன்-கிளாஸ் கேமராக்கள் ஆகியவைகளை கொண்டுள்ளது. குறிப்பாக இதன் கேமராக்கள் பிரகாசமான மற்றும் தெளிவான செல்பீக்களை வழங்கும் ஒரு 12 எம்பி முன் பக்கம் எதிர்கொள்ளும் கேமராவை கொண்டுள்ளது. பின்பக்கத்தை பொறுத்தவரை விவோ எக்ஸ்21 ஆனது, 12 எம்பி + 5எம்பி டூயல்-லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது அனைத்து வகையான ஒளி சூழ்நிலைகளிலும் பெஸ்ட்-இன்-கிளாஸ் படங்களைக் கிளிக் செய்கின்றது. இதன் இரு கேமராக்களும், புகைப்பட-அனுபவத்தை மேம்படுத்துவதற்காக இரட்டை-பிக்சல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இதன் கேமரா சாம்பிள் மற்றும் அதன் செயல்திறன் பற்றி விரிவாக காண்போம்.

இரட்டை இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு.!
விவோ X21 ஆனது 'இரட்டை பிக்சல்' சென்சார் தொழில்நுட்பத்தில் வேலை செய்யும் 12 எம்பி + 5 எம்பி இரட்டை-லென்ஸ் பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. குறிப்பிட்டுள்ள தொழில்நுட்பமானது பிக்சல்களில் photodiodes அளவுகளை அதிகரிப்பதின் மூலம் குறைந்த-ஒளி நிலைமைகளில் கூட சிறந்த கேமரா செயல்திறன் மற்றும் புகைப்பட வெளியீடுகள் கிடைக்கும். Photodiodes எண்ணிக்கையில் ஏற்படும் அதிகரிப்பு ஆனது ஒரு பொருள் அல்லது ஒரு காட்சியை கைப்பற்றுவதற்கு தேவையான போகஸ் வேகம் மற்றும் சென்சார் துல்லியம் ஆகியவற்றில் அதிகரிப்பை ஏற்படுத்தும்.
எளிமையான சொற்களில், இரட்டை-பிக்சல் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும். இது தரமான ஸ்மார்ட்போன் கேமராவுடன் ஒப்பிடும் போது சவாலான ஒளி நிலைகளில் கூட சிறந்த வெளிப்பாட்டை வழங்கும், அதற்கு இதன் இரட்டை பிக்சல் சென்சார்களுக்கு நன்றி. மேலும் விவோ X21 கேமராக்களில் ஒரு நம்பமுடியாத 24 மில்லியன் புகைப்பட பிரிவுகள் உள்ளன. அதன் இறுதி விளைவானது தெளிவான, மிகவும் விரிவான மற்றும் விவரமான படங்களை நமக்கு வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

குறைந்த ஒளி நிலைமையில் எடுக்கப்பட்ட கேமரா சாம்பிள்.!
ஒரு விவோ X21 ஸ்மார்ட்போன் கையில் கிடைத்ததும் நாங்கள் புகைப்படங்கள் எடுக்க தொடங்கினோம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை குறைந்த ஒளியில் சோதனைக்கு மற்றும் கேமரா மென்பொருள் சோதனைக்கும் உட்படுத்த விரும்பினோம். அந்த சோதனையில் அழகான நிறங்கள் பிரதிபலிப்பதை நாங்கள் கண்டறிந்தோம். விவோ X21 ஆனது ஒளி ஆதாரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட வண்ணங்களை கைப்பற்றியது எப்படி என்பதை இந்த புகைப்படத்தில் நீங்கள் காணலாம், தண்ணீர் மற்றும் கான்கிரீட் மீதான சுவாரஸ்யமாக விவரிப்பை நீங்கள் காணலாம். இயற்கையான ஒளி இல்லை என்றாலும் கூட ஒட்டுமொத்த படத்தில் நல்ல அளவிலான தகவல்கள் உள்ளன. விவோ X21-ல் உள்ள இரட்டை-பிக்சல் சென்சார் தொழில்நுட்பத்துடன், நீங்கள் பின்னொளி அல்லது குறைந்த-ஒளி சூழ்நிலைகளிலில் கூட அதிர்ச்சியூட்டும் படங்களை கைப்பற்றலாம்.

விவோ X21-ல் ஏஐ கொண்டு இயங்கும் HDR பயன்முறை.!
விவோ X21-ன் 12 எம்பி + 5 எம்பி இரட்டை லென்ஸ் கேமரா சந்தையில் கிடைக்கும் மற்ற இரட்டை லென்ஸ் கேமரா அமைப்புகளுக்கு ஒரு படி மேலே உள்ளது. அதாவது ஒரு நிலையான HDR பயன்முறைக்கு பதிலாக, விவோ X21-ல் உள்ள கேமரா ஆனது செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு கொண்ட HDR பயன்முறையை கொண்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவின் சக்தியானது, புத்திசாலித்தனமாக வெளிச்சத்தின் அடர்த்தியைக் கண்டறிந்து அந்தந்த சட்டகத்தில் நிறைய தகவலை வெளியிடுகிறது. அதாவது, இருண்ட அல்லது பின்னொளி சூழ்நிலைகளில் கூட சிறந்த ஒளி வீச்சை வழங்கும் மற்றும் சிறந்த தகவல்களை இயற்கையான மற்றும் தெளிவான முறையில் வழங்கும்.

டேலைட் ஷார்ட்ஸ்.!
நிலையான டேலைட் ஷார்ட்ஸ்களை பொறுத்தவரை, தரமான செயல்திறனையே பார்க்க முடிகிறது. புகைப்படத்தின் வெளியீடு சுவாரஸ்யமாக உள்ளது மற்றும் நீங்கள் 100% ஸூம் செய்தால் கூர் மிக சிறிய pixilation-ஐயே காண முடிகிறது. நல்ல வண்ணங்கள்,தரமான விகிதங்கள் பதிவாகின்றன. அதை விவோ X21-ன் AMOLED திரையில் பார்க்கும் போது இன்னும் அழகானதாக தெரிகின்றது, ஈர்க்கக்கூடியதாக உள்ளது. விவோ 21-ன் இரட்டை கேமரா அமைப்பின் 5 எம்பி இரண்டாம் நிலை கேமராவானது ஒரு மகிழ்வளிக்கும் பொக்கே விளைவு உருவாக்குகிறது. உடன் டெப்த் ஆப் பீல்ட் வழியாக விரும்பிய வெளியீட்டை பெற உங்கள் தேவைக்கேற்ப, ஆழமற்ற மற்றும் ஆழமான பின்புலத்தையும் நீங்கள் அமைத்துக்கொள்ள முடியும்.

ஏஐ பேஸ் பியூட்டி மற்றும் ஏஆர் ஸ்டிக்கர்கள் கொண்ட 12 எம்பி செல்பீ கேமரா.!
விவோ கடந்த சில ஆண்டுகளில் சில அற்புதமான செல்பீ ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளது. ஆனால் அதற்கெல்லாம் சிம்மசொப்பனமாக புதிய விவோ X21 திகழ்கிறது. ஏனெனில் இது முற்றிலும் வேறுபட்ட செல்பீ விளையாட்டை விளையாடுகிறது. ஒரு 12 எம்பி முன் பக்கம் எதிர்கொள்ளும் கேமராவை கொண்டுள்ளது. இதுவும் இரட்டை பிக்சல் தொழில்நுட்பத்தின் கீழ் வேலை செய்கிறது. உடன் புதிய ஏஐ பேஸ் பியூட்டி உடன் வருகிறது. இது விவோவின் கிளாசிக் பேஸ் பியூட்டி மேம்பாடாகும், இது தாடி, தோல் தொனி, கண்கள் போன்ற தனிப்பட்ட பயனரின், தனிப்பட்ட அம்சங்களை அங்கீகரிக்கும்.விவோ X21-ன் செல்பீ கேமராவில் உள்ள இயந்திர கற்றல் சக்தியானது உங்களுக்கான சரியான செல்பீயை உருவாக்க வழிவகுக்கும். உடன் உங்கள் முகம் பிரகாசமானதாகவும் இயல்பாகவும் அழகாக இருப்பதையும் அது உறுதி செய்யும்.

உள்ளங்கையை நீட்டினால் டைமர் ஆரம்பிக்க உதவும்.!
முக்கியமாக, இதன் முன் கேமரா ஆனது ஸ்னாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைப்பின்னல் பயன்பாடுகளில் நீங்கள் சில சோதனைகளை செய்ய அனுமதிக்கும் வண்ணம், ஏஆர் ஸ்டிக்கர்களை ஆதரிக்கிறது. உடன் விவோ பால்ம் கேப்சரையும் சேர்க்கிறது, இது கிளிக் பொத்தானை நீங்கள் அடைய முடியாமல் இருக்கும் போது ஒரு ஷாட் எடுக்க, வெறுமனே உங்கள் உள்ளங்கையை நீட்டினால் டைமர் ஆரம்பிக்க உதவும். கடைசியாக ஸ்டூடியோ-பாணி ஒளி விளைவுகளை சேர்க்கும் 'செல்பீ லைட்' அம்சம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான ஒளி விளைவுகளை, தொழில்முறை கவர் ஷாட் போன்றதொரு ஏற்பாட்டை உண்டாக்கும்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790