விவோ X21 அல்லது ஒன்ப்ளஸ் 6 : இரண்டில் எதை வாங்கலாம்? இந்தியர்களே உஷார்.!

உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார் மட்டுமின்றி விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் அகச்சிவப்பு அடிப்படையிலான முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பமும் உள்ளது.

|

எதிர்கால ஸ்மார்ட்போன் அம்சங்களை முன்னரே கணித்து அதனை சாத்தியமாக்கி, பின்னர் அதையொரு பிரதான பாணியாக மாற்றுவதில் பெயர் போன விவோ நிறுவனம், அதன் விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

விவோ X21 அல்லது ஒன்ப்ளஸ் 6 : இரண்டில் எதை வாங்கலாம்? இந்தியர்களே உஷார்

இது எதிர்காலத்திற்கான டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனிங் தொழில்நுட்பத்துடன் வெளிவரும் முதல் வணிக ஸ்மார்ட்போன் ஆகும். இதுதவிர மேலும் சில பிராதான் அம்சங்களையும் கொண்டுள்ளது. அதில் இதன் பின்புறத்தில் அமைந்துள்ள இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு மற்றும் 6 ஜிபி ரேம் உடனான ஸ்னாப்டிராகன் 660 சிபியூ ஆகியவைகளை கூறலாம். எல்லாவற்றிக்கும் மேலாக விவோ எக்ஸ்21 ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்குகிறது. இந்திய சந்தையில் ரூ.35,990/-க்கு வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனை வாங்க இன்னும்
பல காரணங்கள் உள்ளன. அவைகளை விரிவாக காணலாம்.

ஸ்மார்ட்ஃபோன்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு வழக்கமான மற்றும் முக்கிய பகுதியாக மாறிவிட்டன. கடந்த ஒரு தசாப்தத்தில் நிகழ்ந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் பிசிக்கள், மியூசிக் பிளேயர்கள், கேமிங் கன்சோல்கள் மற்றும் உயர் இறுதியில் கேமராக்கள் போன்ற சாதனங்கள் கூட ஓரளவிற்கு தான் மாற்றங்களை கண்டுள்ளது. ஆனால் ஸ்மார்ட்போனோ ஏகப்பட்ட மாற்றங்களை கண்டுள்ளது.

 மெல்லிய பெஸல்கள்

மெல்லிய பெஸல்கள்

அம்மாதிரியான முன்னேற்றங்களில் மிக மெல்லிய பெஸல்கள், [பாஸ்ட் சார்ஜிங், இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பு முறைகள் மற்றும் ஏஆர் ஸ்டிக்கர்கள் போன்ற புதுமைகளை புகுத்திய நிறுவனங்கள் கூடுதல் வெற்றியை தக்கவைத்துக் கொண்டன. அதில் ஒரு நிறுவனம் தான் விவோ.
குறிப்பாக அதன் சமீபத்திய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த வரப்போகும் மற்றும் தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பாணியை மாற்றும் வல்லமைகளை கொண்டுள்ளது. குறிப்பாக எதிர்காலத்திற்கான டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் முதன்முதலாக மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC 2017) நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. பின்னர் தற்போது அறிமுகமாகியுள்ளது.

கைரேகை உணர்திறன்

கைரேகை உணர்திறன்

இந்த புதுமையான தொழில்நுட்பம் ஆனது விவோ எக்ஸ20 பிளஸ் யூடி ஸ்மார்ட்போனில் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த ஸ்மார்ட்போனின்
கீழ்-பகுதியில் டிஸ்பிளேவில் உட்பொதிக்கப்பட்ட கைரேகை உணர்திறன் தொழில்நுட்பம் இடம்பெற்று இருந்தது. தற்போது அந்த அம்சம்
விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் அறிமுகமாகியுள்ளது. விவோ எக்ஸ்21 ஆனது சினாப்டிக்ஸ்கிளியர் IDFS9500 ஆப்டிகல் சென்சார்
உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் கவனமாக எக்ஸ்21 ஸ்மார்ட்போனின் AMOLED டிஸ்பிளேவின் மேற்பரப்பில் நிறுவப்பட்டுள்ளது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் இந்த புதிய தொழில்நுட்பத்தை தங்கள் ஸ்மார்ட்போன்களில் முயற்சித்தாலும் கூட, ஒரு மாதிரியை கூட அவர்களால் வழங்க முடியவில்லை. ஆனால் விவோ அதை மிக எளிமையாக சாதித்துள்ளது.

 புதுமையான அம்சம்

புதுமையான அம்சம்

சினாப்டிக்ஸ் கிளியர் ID FS9500 ஆனது கைரேகை சென்சாரை அடிப்படையாக கொண்ட ஒரு சிறிய CMOS சென்சார் ஆகும். இது ஒளியியல் கொள்கைகளின் கீழ் தான் வேலை செய்யும். இது டிஸ்பிளே கண்ணாடியின் மூன்று அடுக்குகளுக்கு கீழே வைக்கப்பட்டுள்ளது. கேட்பதற்கே இவ்வளவு நன்றாக இருக்கிறதே, பயன்படுத்தி பார்த்தால், சொல்லவே வேண்டாம். இது கோட்பாட்டளவில், ஒரு சாதாரணமான கைரேகை ரீடரை விடவும் விரைவாக செயல்படும். எந்த சூழ்நிலையிலும், இருண்ட அறைகளில் கூட அல்லது நேரடியான சூரிய ஒளியிலும் கூட தெளிவாக
பயன்படுத்தப்படலாம். விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள இந்த புதுமையான அம்சம், ஒரு பிரதான எதிர்கால மொபைல் அம்சமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இந்த சென்சார் மிகவும் வசதியான இடத்தில வைக்கப்பட்டுள்ளது. அதாவது டிஸ்பிளேவின் கீழ் இருந்து சரியாக 1 செமீ உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சென்சார் உள்ள இடத்தை ஸ்மார்ட்போன் ஒளி வழியாக வெளிப்படுத்தும் என்பதால், அதை டெஹடா வேண்டிய அவசியம் இருக்காது. அதில் ஒரு சிறிய அழுத்தம் மட்டுமே போதும். மேலும் கைரேகை சென்சாரை தொட்டதுமே, அது ஒலிகளை வெளிக்கிடும் (புகைப்படத்தில் காட்சிப்படுவது போல.!

 பாதுகாப்பு

பாதுகாப்பு

உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சார் மட்டுமின்றி விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் அகச்சிவப்பு அடிப்படையிலான முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பமும் உள்ளது மற்றும் அது கண் சிமிட்டலின் வழியாக ஸ்மார்ட்போனை திறக்க உதவும் என்பது கூடுதல் சுவாரசியம்.ஆக ஒரு புதிய டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உடன் இணைந்து, பேஸ் அன்லாக் என இரட்டை பாதுகாப்பு அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் போதுமான பாதுகாப்பை உறுதி செய்கிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

மற்றொரு புதுமையான தொழில்நுட்பமான இதன் ப்ளீடிங் எட்ஜ் தொழில்நுட்பம் திகழ்கிறது. இது விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனை 19: 9 விகிதம்
மற்றும் மிகவும் மெல்லிய பெஸல்களை ஒரு மகத்தான 6.28 அங்குல AMOLED டிஸ்பிளேவாகி வழங்குகிறது. ஈர்க்கக்கூடிய 90.3% ஸ்க்ரீன்
டூ பாடி விகிதத்தை கொண்டுள்ளதால், இதன் மல்டிமீடியா அனுபவம் வேற லெவலில் இருக்கும்.

கேமரா

கேமரா

விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போஞ்சின் பரபரப்பான அம்சங்களின் பட்டியல் இதோடு முடிவடையவில்லை. இதில் 'இரட்டை பிக்சல்' சென்சார் தொழில்நுட்பத்தில் இயங்கும் திறன்வாய்ந்த இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பும் உள்ளது. இதன் இரட்டை பிக்சல் தொழில்நுட்பம் ஆனது குறைந்த-ஒளி நிலைமைகளிலும் கூட வேகமான மற்றும் செயல்திறன் மிக்க போகஸை செலுத்த உதவும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4கே வீடியோ பதிவுகளை ஆதரிக்கிறது மற்றும் ஏஐ ஆதரவு கொண்ட மென்பொருள் வழிமுறைகளுடன் கூடிய ஒரு 12 எம்பி செல்பீ கேமராவையும்
கொண்டுள்ளது.

 பயோமெட்ரிக்  அம்சம்

பயோமெட்ரிக் அம்சம்

இந்த அம்சங்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியான ஒன்ப்ளஸ் 6 உடன் போட்டியிடுவதற்கு தகுதியானவையாகும். ஆனால் போட்டியிடவே முடியாத ஒரு அம்சம் இருக்கிறது என்றால் அது டிஸ்பிளேவில் உள்ள கைரேகை ஸ்கேனர் தான். விவோ எக்ஸ்21 மூலம் ஒரு புதிய மற்றும் மேம்பட்ட பயோமெட்ரிக் அம்சம் உருவாகியுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை ஈர்க்கும் மற்றும் ஒரு பாணியாக மாறும் என்பதில் சந்தேகமே
வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Vivo X21 brings out conceptual design into reality with its in display fingerprint reader : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X