ஐபோன் எக்ஸ்க்கு போட்டியா விவோ எக்ஸ்21 அறிமுகம்.!
விவோ நிறுவனம் ஸ்டான்டர்டு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என இருவித விவோ எக்ஸ்21 மாடல்களை வெளியிட்டுள்ளது.
விவோ நிறுவனம் ஏற்கனவே விவோ எக்ஸ்21 டாப்-எண்ட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது, மேலும் புதிய விவோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.28-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 90.3% ஸ்கிரீன் அளவு, 1.66 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ நிறுவனம் ஸ்டான்டர்டு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் என இருவித விவோ எக்ஸ்21 மாடல்களை வெளியிட்டுள்ளது. மேலும் விவோ எக்ஸ்21 ஸ்டான்டர்டு மாடல் விற்பனை மார்ச் 24-ம் தேதியும், அதன்பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்ட மாடல் மார்ச் 28-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ எக்ஸ்21 சாதனம், மேலும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு எக்ஸ்21 மாடல்கள் வெளிவந்துள்ளது.

விவோ எக்ஸ்21 சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 12எம்பி +5எம்பி டூயல் ரியர்
கேமரா அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. முன்புறம் 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ எக்ஸ்21 ஸ்டான்டர்டு மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி முறையே இதன் விலை மதிப்பு ரூ.29.870-ஆக உள்ளது, இதே மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி முறையே ரூ.32,960-ஆக உள்ளது.


இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் கொண்ட விவோ எக்ஸ்21 மாடலில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.37,085-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications