Home
Mobile

Vivo போட்டான் பாரு.. 6200mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ZEISS ஆப்டிக்ஸ் மாடல்!

இந்திய மார்கெட்டில் விவோ எக்ஸ்200டி (Vivo X200T) அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம், ஓர்ஜின்ஓஎஸ் மட்டுமல்லாமல், விற்பனை விவரங்களையும் விவோ இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ்200 (Vivo X200), விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) மற்றும் விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) ஆகிய மாடல்கள் இந்தியாவில் ஏற்கனவே வெளியாகிவிட்டன. ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

Vivo போட்டான் பாரு.. 6200mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா!

இப்போது, விவோ இந்தியா நிறுவனமே விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருப்பதையும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதையும் உறுதி செய்துள்ளது. விவோ எக்ஸ்200 சீரிஸ் மாடல்களை போலவே இதிலும் ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் கிடைக்க உள்ளது. மேலும், ஓர்ஜின்ஓஎஸ் வருகிறது.

இந்த விவரங்களுடன் டெலிபோட்டோவுடன் ரியர் கேமரா சிஸ்டம் உறுதியாகி இருக்கிறது. எப்போது விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், ஜனவரி மாதத்துக்குள் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், பிளிப்கார்ட்டில மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டால் ஓரிரு வாரங்களில் ஸ்மார்ட்போன் வெளியாகிவிடும்.

இந்திய மார்கெட்டில் வெளியாக இருப்பது உறுதியாகியதை அடுத்து டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் எக்ஸ் தளம் வழியாக முழு பீச்சர்களும் தெரியவந்துள்ளது. இதில் மிட்-பிரீமியம் மாடலாக விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது தெரிகிறது. பேட்டரி மற்றும் கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு பக்காவாக இருக்கிறது.

விவோ எக்ஸ்200டி அம்சங்கள் (Vivo X200T Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் (Octa Core MediaTek Dimensity 9400+) சிப்செட்டை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் (OriginOS) கிடைக்க உள்ளது. 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) வருகிறது.

மேலும், 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கின்றன. சோனி எல்ஒய்டி 702 (Sony LYT 702) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார், சோனி எல்ஒய்டி 600 (Sony50 LYT 600) சென்சார் கிடைக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி மற்றும் ஜீஸ் ஆப்டிக்ஸ் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வாய்ஸ் கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 6.67 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இதில் 1.5K ரெசொலூஷன் கிடைக்க உள்ளது.

90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6200mAh பேட்டரி கிடைக்கிறது. இதில் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், டைப்-சி சார்ஜிங் போர்ட் உள்ளது. 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic In-display Fingerprint Senor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி உள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. பிளாக் (Black) மற்றும் பர்பிள் (Purple) கலர்களில் கிடைக்க உள்ளது. விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.65,999 பட்ஜெட்டில் இருக்கிறது. கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில் எக்ஸ்200டி மாடலை எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200T With ZEISS Optics Camera OriginOS Confirmed Ahead Of January Launch in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X