VIVO நீ வேற லெவல் பா.. 2 போன்களின் காம்பினேஷன்.. 6000mAh பேட்டரி, ZEISS கேமராவுடன் புது போன்!
விவோ (VIVO) நிறுவனம் ஆனது "இந்த டிவிஸ்ட்டை நீங்க யாரும் எதிர்பார்க்கலல!" என்கிற படியாக ஒரு வேலையை பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக புதிதாக அறிமுகமான ஒரு சீரீஸின் கீழ் தான் புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு, அந்த சீரீஸின் விரிவாக்கம் செய்யப்படும்.
ஆனால் விவோ நிறுவனம் தனது முந்தைய எக்ஸ்200 சீரிஸின் கீழ் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்த உள்ளதாக தகவல் கிடைதுள்ளது. ஸ்மார்ட்பிரிக்ஸ்-ன் சமீபத்திய அறிக்கையின்படி விவோ நிறுவனம் அதன் எக்ஸ்200 சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்200டி (Vivo X200T) என்கிற புதிய மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இது வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஸ்மார்ட்பிரிக்ஸ்-ன் அறிக்கை தெரிவிக்கிறது. இதில் "இன்னும்" சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், விவோ எக்ஸ்200டி மாடல் ஆனது விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 எப்இ (Vivo X200 FE) ஆகியவற்றின் கலவையாக இருக்கும் என்று கூறப்படுகிறது
விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் கூற்றுப்படி எக்ஸ்200டி ஆனது லேட்டஸ்ட் ஆக அறிமுகமான எக்ஸ்300 சீரீஸை விடவும், எக்ஸ்200 மாடலை விடவும் மலிவு விலையில் கிடைக்கும் ஒரு பிளாக்ஷிப்-லெவல் ஸ்மார்ட்போனாக இருக்கும். இதன் விலை ரூ.55,000 க்குள் இருக்கலாம்.
விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.67 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்
- கேமரா செட்டப்பில் ஸெய்ஸ் (Zeiss) கேமராக்கள் இடம்பெறலாம்
- குறைந்தபட்சம் 6,000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
- மீடியாடெக் நிறுவனத்தின் சிப்செட்உடன் வரலாம்
- ஒரிஜின்ஓஎஸ் 6 ஓஎஸ் கொண்டு இயங்கலாம்.
இந்தியாவில் லேட்டஸ்ட் ஆக அறிமுகமான விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்
விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே ஓஎஸ், சிப், செல்பீ கேமரா, கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அம்சங்களை கொண்டுள்ளது
- சிறிய 6.31-இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக 5,360mAh பேட்டரி
- ட்ரிபிள் ரியர் கேமரா தான் ஆனால் இது OIS உடன் 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவை கொண்டுள்ளது
- அளவில் சிறியதாக இருப்பதால் இந்த போன் அளவீட்டில் 150.57×71.92×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 190 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








