Home
Mobile

இந்தியாவில் புது 5ஜி போனை அறிமுகம் செய்த விவோ.. 6200mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் விவோ எக்ஸ்200டி (Vivo X200T) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. இப்போது விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200டி அம்சங்கள் (Vivo X200T Specifications): 6.67-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1260 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz ஹை ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (High Frequency PWM Dimming) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

இந்தியாவில் புது 5ஜி போனை அறிமுகம் செய்த விவோ.. எந்த மாடல்?

தரமான ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9400 பிளஸ் 3என்எம் எஸ்ஒசி (Octa-Core Dimensity 9400+ 3nm SoC) சிப்செட் உடன் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis-G925 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது.

ஒரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கு பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

50எம்பி Sony IMX921 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி IMX882 3x டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்200டி. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) உள்ளிட்ட வசதிகளும் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனில் உள்ளது.

6200mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வேகமான சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

இந்தியாவில் புது 5ஜி போனை அறிமுகம் செய்த விவோ.. எந்த மாடல்?

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனை சீசைடு லிலாக் ( Seaside Lilac) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

விவோ எக்ஸ்200டி விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999-ஆக உள்ளது. மேலும் இதன் 12 ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.69,999-ஆக உள்ளது. தற்போது இந்த போன் பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்திய ஆன்லைன் ஸ்டோர்களின் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. மேலும் இந்த போனுக்கு ரூ.5000 வரை வங்கி சலுகையும் கிடைக்கும். வரும் பிப்ரவரி 3-ம் தேதி இந்த விவோ போன் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200T with 6200mAh battery launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X