Home
Mobile

இதுக்கு தானே தவம் கிடந்தோம்.. 6200mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் விவோ எக்ஸ்200டி (Vivo X200T) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி உறுதியாகி உள்ளது. 50 எம்பி ஜீஸ் சூப்பர் டெலிபோட்டோ கேமரா, 50 எம்பி ஜீஸ் அல்ட்ரா வைடு ஆங்கிள் மற்றும் 50 எம்பி ஜீஸ் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வருகிற ஜனவரி 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. எக்ஸ் சீரிஸ் மாடல்களை போலவே ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. 50 எம்பி ஜீஸ் சூப்பர் டெலிபோட்டோ கேமரா வருகிறது. இதில் 3X ஆப்டிகல் ஜூமிங் மற்றும் 10X சென்சார் ஜூமிங் கிடைக்கிறது.

இதுக்கு தானே தவம் கிடந்தோம்.. 6200mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. மாடல்?

டெலிபோட்டோ மேக்ரோ (Telephoto Macro) சப்போர்ட் கிடைத்துள்ளது. 50 எம்பி ஜீஸ் மெயின் கேமராவை கொடுத்துள்ளது. இதில் ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட் (Street Photography Mode) உள்ளது. நேச்சுரல் கான்ட்ராஸ்ட் மற்றும் டோன்ஸ் என்ஹான்ஸ்மெண்ட் உள்ளது. 50 எம்பி ஜீஸ் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. இந்த டிரிபிள் கேமராவில் ஏஐ பீச்சர்கள் உள்ளன.

ஏஐ லேண்ட்ஸ்கேப் மாஸ்டர் (AI Landscape Master), ஹோலி ஏஐஜிசி மோட் (Holi AIGC Mode) உள்ளிட்ட பீச்சர்கள் உள்ளன. ஓர்ஜின் ஓஎஸ் 15 (Origin OS 15) கிடைக்க உள்ளது. பிளாக் (Black) மற்றும் பர்பிள் (Purple) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பீச்சர்களை மட்டுமே விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் வெளியாகி உள்ளன.

விவோ எக்ஸ்200டி அம்சங்கள் (Vivo X200T Specifications): 6.67 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதில் 1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9400+ 3nm) சிப்செட்டை கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கிறது. மேலும், 5 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் வீடியோ கால்கள், செல்பீகளுக்காக 32 எம்பி செல்பீ கேமராவை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 100 எக்ஸ் ஹைப்பர் ஜூம் உள்ளது.

90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6200mAh பேட்டரி கிடைக்கிறது. மேலும், 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water & Dust Resistance) கொடுத்துள்ளது. 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display Fingerprint Sensor) கிடைத்துள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளன. இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,999ஆகவும் இருக்கப் போகிறது. ஜனவரி 27 ஆம் தேதிக்கு முன்னதாகவே இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200T With 50MP ZEISS Super Telephoto Camera To Launching on 27 January 2026 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X