பொசுக்குனு ரூ.4,000 கட்.. ஆஃபரில் Vivo போன்.. SONY கேமரா.. 90W சார்ஜிங்.. 6200mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிரீமியம் ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு பக்காவான பேங்க் டிஸ்கவுண்ட் போக விவோ எக்ஸ்200டி (Vivo X200T) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. சோனி சென்சார் கேமரா, 6200mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களுடன் இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் வாங்கி கொள்ள கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.6,800 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.53,199 விலைக்கு இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

விவோ எக்ஸ்200டி அம்சங்கள் (Vivo X200T Specifications): ஆக்டா கோர் டைமன்சிட்டி 9400பிளஸ் 3என்எம் (Octa Core Dimensity 9400+ 3nm) சிப்செட்டை கொடுத்து உள்ளது. மேலும், இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது. 5 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் உள்ளது.
மேலும், 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 6.67 (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கியூ10 பிளஸ் (Q10 Plus) அமோலெட் டிஸ்பிளேவாக இருக்கிறது.
4500 எம்எம் விசி கூலிங் (VC Cooling) கொடுத்து உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) கொடுக்கப்பட்டு உள்ளது. சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.
சோனி ஐஎம்எக்ஸ்881 (Sony IMX882) சென்சாருடன் 3X பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. ஐசோசெல் கேடி1 (ISOCELL KD1) சென்சார் கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) உள்ளது.
90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6200mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. 7.99 எம்எம் தடிமன் மட்டுமே கொடுத்து உள்ளது. சீசைடு லைலாக் (Seaside Lilac) கலர் வேரியண்ட் 203 கிராம் எடை உள்ளது. மேலும், ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) கலர் வேரியண்ட் 205 கிராம் எடை உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளது.
டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்க IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 100X ஹைப்பர் ஜூம், ஆல்-பிக்சல் போகஸ் டெக்னாலஜி, ஜீஸ் மாஸ்டர் கலர் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications