வந்துட்டான்டா சிங்கம்.. ரூ.5,515 ஆஃபரில் 6200mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கிவிட்டது. ஆரம்பமே ரூ.5,515 தள்ளுபடி கிடைப்பதால் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 6200mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி சோனி சென்சார் டெலிபோட்டோ கேமரா, அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொடுத்துள்ளது. இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.69,999ஆகவும் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.5,515 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.54,484 விலையில் இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டானது ரூ.5,545 தள்ளுபடியில் கிடைக்கிறது. ஆகவே, ரூ.64,454 விலைக்கு இந்த வேரியண்ட் கிடைக்கிறது. இஎம்ஐ முறையில் வாங்கினாலும் ரூ.5,000 மேல் தள்ளுபடி கிடைக்கிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டு, ஆக்சிஸ் கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும்.
விவோ எக்ஸ்200டி அம்சங்கள் (Vivo X200T Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400பிளஸ் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9400+ 3nm) சிப்செட்டை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது.
5 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்துள்ளது. இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைத்துள்ளது. 6.67 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டேலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஜீஸ் ஆப்டிகஸ் (ZEISS Optics) கொடுத்துள்ளது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், அல்ட்ரா வைடு கேமராவுக்கு சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் மற்றும் பெரிஸ்கோப் டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் உள்ளது. ஐசோசெல் கேடி1 (ISOCELL KD1) சென்சாருடன் 32 எம்பி செல்பீ கேமராவை இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 6200mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது. மேலும், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. சீசைடு லைலாக் (Seaside Lilac) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கிடைக்கிறது. வை-பை 7 மற்றும் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி உள்ளது.


Click it and Unblock the Notifications








