ஜனவரி 27 வரைக்கும் எந்த போனும் வாங்கிடாதீங்க.. அப்புறம் வருத்தப் படுவீங்க.. ஏன்னா?
விவோ எக்ஸ்300 ப்ரோவை தொடர்ந்து விவோ (VIVO) நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆக விவோ எக்ஸ்200டி (VIVO X200T) மாடல் ஆனது வருகிற ஜனவரி 27 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று விவோ நிறுவனம் அறிவித்து உள்ளது. அறிமுக தேதி வெளியான வேகத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன.
நம்பகமான டிப்ஸ்டர் அபிஷேக் யாதவின் சமீபத்திய எக்ஸ் தள பதிவின் படி, விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் ஆனது மொத்தம் இரண்டு மெமரி ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.69,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் ஆனது அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட், விவோ இந்தியா ஸ்டோர் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான OriginOS 6
- 5 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருட செக்யூரிட்டி அப்டேட்
- 6.67 இன்ச் 1.5K (1260 x 2800 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிளஸ் சிப்செட்
- 12GB LPDDR5x அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 4.5K நானோஃப்ளூயிட் விசி சிஸ்டம்
- Zeiss-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி LYT-702 ப்ரைமரி ஷூட்டர்
- 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் கேமரா
- 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங்
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,200mAh பேட்டரி
- USB 2.0 டைப்-சி போர்ட்
- 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்


Click it and Unblock the Notifications








