வந்துட்டான்.. புதிய VIVO போன்.. 12GB ரேம், ZEISS கேமரா, IP69 ரேட்டிங், 90W சார்ஜிங், 6200mAh பேட்டரி!
விவோ (VIVO) நிறுவனம் ஆனது கூடிய விரைவில் இந்தியாவில் ஒரு புதிய "டி" பிராண்டிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அது விவோ எக்ஸ்200டி (Vivo X200T) மாடல் ஆகும். இதை உறுதிப்படுத்தும் படியாக 2 வகையான தகவல்கள் கிடைத்து உள்ளன.
ஒன்று - விவோ நிறுவனமே வரவிருக்கும் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனுக்கான பிரத்யேக மைக்ரோசைட்டை வெளியிட்டு உள்ளது. இது இந்தியாவில் அதன் உடனடி வெளியீடு மற்றும் கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்துகிறது. இரண்டு - இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் அவற்றின் விலை விவரங்களும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

இந்தியாவில் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் மாடல் இந்தியாவில் ரூ.59,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் கூறுகிறார். இதேபோல 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஆப்ஷன் உடன் வரும் ஹை-எண்ட் வேரியண்ட் ஆனது ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் பிளாக் மற்றும் பர்பிள் கலர்களில் வாங்குவதற்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தொழில்நுட்ப நிறுவனம் ஆன விவோ இன்னும் இந்த விவரங்களை உறுதிப்படுத்தவில்லை. சரியான வெளியீட்டு தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதுகுறித்த அப்டேட் வரலாம்.
மறுகையில் லீக் ஆன ரெண்டர்களின் (புகைப்படங்களின்) வழியாக இது சர்குலர் ரியர் கேமரா மாட்யூல், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், வலது பக்கத்தில் ஒரு பவர் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல்ஸ், இடது பக்கம் க்ளீன் டிசைன், முன்பக்கத்தில் ஒரு ஹோல் பஞ்ச் டிஸ்பிளே கட்அவுட் ஆகியவைகளை காண முடிகிறது.
விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- Android 16 அடிப்படையிலான OriginOS 6
- 5 வருட ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருட செக்யூரிட்டி அப்டேட்
- 6.67 இன்ச் 1.5K (1260 x 2800 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிளஸ் சிப்செட்
- 12GB LPDDR5x அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 4.5K நானோஃப்ளூயிட் விசி சிஸ்டம்
- Zeiss-பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50-மெகாபிக்சல் சோனி LYT-702 ப்ரைமரி ஷூட்டர்
- 50 மெகாபிக்சல் சாம்சங் JN1 அல்ட்ராவைடு கேமரா
- 50 மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் கேமரா
- 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 + IP69 ரேட்டிங்
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,200mAh பேட்டரி
- USB 2.0 டைப்-சி போர்ட்
- 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
முன்னதாக இந்தியாவில் அறிமுகமான விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்


Click it and Unblock the Notifications








