Home
Mobile

வேற போன் எதுக்கு.. VIVO போதும் நமக்கு.. 5ஜி, Zeiss கேமரா, 90W சார்ஜிங், 6200mAh பேட்டரி உடன் புது போன்!

6000mAh பேட்டரி உடன் விவோ ஒய்50எஸ் 5ஜி (Vivo Y50s 5G) மற்றும் விவோ ஒய்50இ 5ஜி (Vivo Y50e 5G) ஆகிய 2 மாடல்களை அறிமுகம் செய்த் கையோடு, விவோ நிறுவனமானது கூடிய விரைவில் இந்திய சந்தையில் விவோ எக்ஸ்200டி (Vivo X200T) மாடலை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது

டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh) வழியாக கிடைத்த தகவலை அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட் பிரிக்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையானது, 2026 ஜனவரி கடைசி வாரத்தில் இந்தியாவில் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும். அதாவது இது ஜனவரி 26 முதல் ஜனவரி 31 க்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIVO புது போன்.. 5ஜி, Zeiss கேமரா, 90W சார்ஜிங், 6200mAh பேட்டரி!

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.50,000 முதல் ரூ.55,000 க்குள் இருக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை விவோ எக்ஸ்20டி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இது ஸெய்ஸ் (Zeiss) பிராண்டட் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 9400 Plus Chipset) மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,200mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

விவோ ஒய்50எஸ் 5ஜி மற்றும் விவோ ஒய்50இ 5ஜி விலை விவரங்கள்: சீனாவில் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் உடன் வரும் விவோ ஒய்50இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ. 19400 க்கும், விவோ ஒய்50எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.23,400 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ ஒய்50எஸ் 5ஜி மற்றும் விவோ ஒய்50இ 5ஜி அம்சங்கள்: இரண்டுமே ஒரே மாதிரியான வடிவமைப்பை பகிர்ந்து கொள்கின்றன. இரண்டுமே 1600 x 720 பிக்சல்ஸ் எச்டி பிளஸ் ரெசல்யூஷன், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 90ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் 6.74-இன்ச் பிளாட் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன. மேலும் இரண்டு மாடல்களுமே ஐபி64 ரேட்டிங்கை பெற்றுள்ளன

இரண்டுமே ஒரே மாதிரியான 167.30 x 76.95 x 8.19மிமீ டிசைன் மற்றும் 204 கிராம் எடையை கொண்டுள்ளன மற்றும் இரண்டுமே டைமன்சிட்டி 6300 சிப்செடை மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் இந்த இரண்டு விவோ 5ஜி ஸ்மார்ட்போன்களுமே 6000mAh பேட்டரியை கொண்டு உள்ளன.

முக்கிய வேறுபாட்டை பொறுத்தவரை விவோ ஒய்50இ 5ஜி மாடல் ஆனது 15W சார்ஜிங்கை ஆதரிக்கிறது, ஆனால் விவோ ஒய்50எஸ் 5ஜி மாடல் ஆனது 44W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது. இருப்பினும் இரண்டு மாடல்களிலும் ஓடிஜி ரிவர்ஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு (OTG reverse charging support) உள்ளது.

விவோ ஒய்50இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது eMMC 5.1 ஐ பயன்படுத்தி 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அதே நேரத்தில் விவோ ஒய்50எஸ் 5ஜி மாடல் ஆனது 6GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ், மற்றும் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் சற்றே ஸ்பீட் ஆன UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.

சாஃப்ட்வேரை பொறுத்தவரை இரண்டுமே ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின் ஓஎஸ் 5 உடன் வருகின்றன. கேமராக்களை பொறுத்தவரை 5எம்பி செல்பீ கேமரா மற்றும் ஆட்டோஃபோகஸுடன் கூடிய 13எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளன. இது 1080p வரையிலான வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது.

செக்யூரிட்டி அம்சங்களை பொறுத்தவரை, இரண்டுமே பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனிங் மற்றும் பேஸ் ரிகக்னைசேஷனை கொண்டுள்ளன. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை டூயல் சிம் ஆதரவு, 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.4, மல்டி-சிஸ்டம் ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-C, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், இன்ப்ராரெட் ரிமோட் கண்ட்ரோல் ஆகியவைகளை கொண்டுள்ளன

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200T India Price leaked Launch Tipped between January 26 and January 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X