Home
Mobile

ஜன.26 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 50எம்பி கேமரா.. 90W சார்ஜிங்.. புது Vivo போன் ரெடி.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்200டி (Vivo X200T) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளியிட்ட தகவலின்படி, ஜனவரி 26 முதல் ஜனவரி 31-க்குள் இந்த புதிய விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனாலும் விவோ நிறுவனம் இந்த புதிய போனின் வெளியீட்டை நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஆன்லைனில் வெளியான விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜன.26 வரை எந்த போனும் வாங்காதீங்க.. புது Vivo போன் ரெடி.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்200டி அம்சங்கள் (Vivo X200T Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் (120Hz Refresh Rate),4000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட் பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Zeiss கேமரா செட்டப் உடன் இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் வெளியாகும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (MediaTek Dimensity 9400 plus) சிப்செட் உடன் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் விவோ எக்ஸ்200டி போன் அறிமுகமாகும். மேலும்IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் இந்த போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) உள்ளிட்ட வசதிகள் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உடன் விவோ எக்ஸ்200டி போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 5 ஆண்டுகள் ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஜன.26 வரை எந்த போனும் வாங்காதீங்க.. புது Vivo போன் ரெடி.. எந்த மாடல்?

6000mAh பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஸ்டெல்லர் பிளாக், சீசைட் லிலாக் போன்ற நிறங்களில் இந்த போன் வெளியாகும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. குறிப்பாக விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.55,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200T India Launch Timeline Leaked: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X