ஜனவரி 26 இருக்கு Vivo கச்சேரி.. 6200mAh பேட்டரி.. 5 ஆண்ட்ராய்டு OS அப்டேட்.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய விவோ எக்ஸ்200டி (Vivo X200T) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரம் மற்றும் முழு அம்சங்களும் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்200டி அம்சங்கள் (Vivo X200T Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் (MediaTek Dimensity 9400 plus) சிப்செட் உடன் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உடன் விவோ எக்ஸ்200டி போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 5 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதுதவிர 7 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்களும் இந்த போனுக்கும் கிடைக்கும்.
அதுவும் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1260 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 4000 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Zeiss கேமரா செட்டப் உடன் இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் வெளியாகும். அதன்படி OIS ஆதரவு கொண்ட 50எம்பி Sony LYTIA LYT-702 மெயின் கேமரா + 50எம்பி சாம்சங் ஜேஎன்1 சென்சார் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது.
அதுவும் 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் விவோ எக்ஸ்200டி போன் அறிமுகமாகும். மேலும் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6200mAh பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன். ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
ஸ்டெல்லர் பிளாக், சீசைட் லிலாக் போன்ற நிறங்களில் இந்த போன் வெளியாகும். மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன. யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) உள்ளிட்ட வசதிகள் இந்த விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன. பிளாக், பர்பிள் நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஜனவரி 26 முதல் ஜனவரி 31-க்குள் இந்த புதிய விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.55,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








