பிளிப்கார்ட் Sasa Lele Sale.. சோனி கேமரா.. 6200mAh பேட்டரி.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் வரும் மே 9-ம் தேதி Sasa Lele Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் விவோ நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட்போன் மாடலும் தள்ளுபடி விலையில் கிடைக்க உள்ளது.
அதாவது விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.59,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் மே 9-ல் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த விவோ எக்ஸ்200டி போன் ஆனது ரூ.49,999 விலையில் வாங்க கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200டி அம்சங்கள் (Vivo X200T Specifications): ஆக்டா-கோர் டைமன்சிட்டி 9400 பிளஸ் 3என்எம் எஸ்ஒசி (Octa-Core Dimensity 9400+ 3nm SoC) சிப்செட் உடன் விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis-G925 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது.
அதேபோல் 6.67-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2800×1260 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz ஹை ஃபிரிகொன்சி பிடபுள்யூஎம் டிம்மிங் (High Frequency PWM Dimming) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ஒரிஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்குப் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
அதுவும் 50எம்பி Sony IMX921 மெயின் சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி IMX882 3x டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்200டி. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) உள்ளிட்ட வசதிகளும் உள்ளது.

இந்த விவோ எக்ஸ்200டி ஸ்மார்ட்போன் 6200mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வேகமான சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.
மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனை சீசைடு லிலாக் ( Seaside Lilac) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications