Home
Mobile

இவரு வேற மாதிரி.. 6200mAh பேட்டரி.. SONY கேமரா.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. ZEISS ஆப்டிக்ஸ்.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்200எஸ் (Vivo X200s) போனின் வெளியீட்டு தேதி அதிகரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, கேமரா, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி மற்றும் கலர் வேரியண்ட்களின் விவரங்கள் மார்கெட்டில் கசிந்ததை தொடர்ந்து, வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. இந்த விவோ எக்ஸ்200எஸ் போன் எப்போது வெளியாகிறது? எதிர்பார்க்கப்படும் பீச்சர்கள் எப்படி? விலை எப்படி இருக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் முதலில் வெளியாக இருக்கிறது. வரும் ஏப்ரல் 21ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. டிசைன் மற்றும் கலர் விவரங்கள் வெளியாகிவிட்டன. ஆகவே, ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. அதேபோல சாப்ட் பர்பிள் (Soft Purple), மின்ட் க்ரீன் (Mint Green) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

இவரு வேற மாதிரி.. 6200mAh பேட்டரி.. SONY கேமரா.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்!

மேலும், ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) கலர்களிலும் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் லீக்கான டீசர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல மார்கெட்டில் கசிந்து முழு பீச்சர்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த பீச்சர்களை விவோ நிறுவனமே அடுத்தடுத்து வெளியிட வாய்ப்புள்ளது. ஆகவே, அதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ்200எஸ் அம்சங்கள் (Vivo X200s Specifications): இந்த விவோ போனில் 6.67 இன்ச் பிஓஈ கியூ10 அமோலெட் (BOE Q10 AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ரா-சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic Fingerprint Sensor) வருகிறது. அல்ட்ரா-நேரவ் பெசல் டிசைனில் கொண்டிருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 9400+ SoC) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருவது கிட்டத்தட்ட உறுதியாகும். ஜீஸ் ஆப்டிக்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்டிருக்கிறது.

மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்9121 (Sony IMX921) சென்சார் + ஓஐஎஸ் டெக்னாலஜி (OIS Technology) கிடைக்கிறது. அல்ட்ரா வைடு கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் வருகிறது. அதேபோல பெரிஸ்கோப் டெலிபோட்டோவில் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஓஐஎஸ் டெக்னாலஜி கிடைக்க இருக்கிறது. 3X ஆப்டிகல் ஜூமிங் எதிர்பார்க்கலாம்.

இந்த விவோ எக்ஸ்200எஸ் போனில் பேட்டரி சிஸ்டம் அல்ட்ரா பிரீமியம் காட்டியிருக்கிறது. ஏனென்றால், இந்திய மார்கெட்டில் கிடைக்கும் இதற்கு முந்தைய மாடலான விவோ எக்ஸ்200 போனில் 5,700mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைத்தது. ஆனால், வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கவில்லை. ஆனால், பேட்டரி கேபாசிட்டி மற்றும் சார்ஜிங் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த போனில் 6,200mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், இந்த விவோவிலும் IP69 ரேட்டிங் வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த விவோ வி200எஸ் போனானது மிட்-ரேஞ்ச் பட்ஜெட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X