டிசம்பர் 12 உறுதி.. தலைவன் Vivo இந்தியாவுக்கு வரான்.. 200எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதாவது வரும் டிசம்பர் 12-ம் தேதி இந்த புதிய விவோ போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன்கள் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதபோல் விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகம். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போன்களில் இருக்கும்.

விவோ எக்ஸ்200 அம்சங்கள் (Vivo X200 Specifications): 6.67-இன்ச் 1.5கே ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 15, ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC), 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 32எம்பி செல்பி கேமரா, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமர செட்டப் , 5800mAh பேட்டரி, 90W சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த விவோ எக்ஸ்200 போன் அறிமுகம் செய்யப்படும்.
விவோ எக்ஸ்200 ப்ரோ அம்சங்கள் (Vivo X200 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 SoC) கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ போன். குறிப்பாக அதேபோல் இமோர்ட்டாலிஸ் G925 GPU ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி கொண்டுள்ளது இந்த விவோ போன். கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
6.78-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ. மேலும் 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (nits peak brightness) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 உடன் ஒரிஜின் ஓஎஸ் 5 (OriginOS 5 based on Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமர அமைப்புடன் விவோ எக்ஸ்200 ப்ரோ போன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6000mAh பேட்டரி, 90W சார்ஜிங், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, வைஃபை (Wi-Fi 7 802.11 be), ப்ளூடூத் (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS), க்ளோனஸ் (GLONASS), கலிலியோ (Galileo)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ போனில் உள்ளன. அதேபோல் தரமான ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.
குறிப்பாக விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) போன்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன்கள் வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








