Home
Mobile

மிரண்டு போவீங்க.. SONY கேமரா.. 100X ஜூமிங்.. 90W சார்ஜிங்.. 5800mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?

100X டிஜிட்டல் ஜூமிங் கொண்ட டெலிபோட்டோ கேமரா, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட மெயின் கேமரா, 90W ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட 5800mAh பேட்டரி, ஜீஸ் நேச்சுரல் கலர் காலிப்ரேஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரி போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் விவோ எக்ஸ்200 (Vivo X200) போன் களமிறங்கி இருக்கிறது. இந்த விவோ போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ்200 அம்சங்கள் (Vivo X200 Specifications): இந்த விவோவில் 6.67 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட எல்டிபிஎஸ் (LTPS) மாடலாகும். 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது.

மிரண்டு போவீங்க.. SONY கேமரா.. 100X ஜூமிங்.. 90W சார்ஜிங்.. எந்த போன்?

மேலும், ஜீஸ் நேச்சுரல் கலர் காலிப்ரேஷன் (Zeiss Natural Color Calibration) வருகிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. ஓர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) கொண்ட ஆக்டா கோர் டைமன்சிட்டி 9400 3என்எம் (Octa Core Dimensity 9400 3nm) சிப்செட் வருகிறது. இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த விவோ எக்ஸ்200 போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடல்களும் கிடைக்க இருக்கின்றன.

ஜீஸ் ஆப்டிகல் லென்ஸ் (Zeiss Optical Lens) கொண்ட அல்ட்ரா பிரீமியம் கேமரா சிஸ்டம் வருகிறது. சோனி எல்ஒய்டி 818 (Sony LYT 818) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stablization) மற்றும் விசிஎஸ் 3.0 (VCS 3.0) கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது.

மிரண்டு போவீங்க.. SONY கேமரா.. 100X ஜூமிங்.. 90W சார்ஜிங்.. எந்த போன்?

இந்த கேமராவில் சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ வருகிறது. இந்த கேமராவில் டெலிமேக்ரோ (Telemacro) கிடைக்கிறது. மேலும், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zooming) வருகிறது.

100X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம். இந்த விவோ எக்ஸ்200 போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 90W ஃபிளாஷ் சார்ஜிங் கொண்ட 5800mAh பேட்டரி வருகிறது சேப்பியர் ப்ளூ (Sapphire Blue), டைட்டானியம் (Titanium), ஒயிட் மூன் லைட் (White Moonlight) மற்றும் நைட் பிளாக் (Night Black) ஆகிய கலர்களில் வருகிறது.

இந்த விவோ எக்ஸ்200 போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.51,010ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.55,750ஆகவும் இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.59,320ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.65,250ஆகவும் இருக்கிறது.

இப்போது, சீனாவில் வெளியாகி இருக்கிறது. ப்ரீ-ஆர்டருக்கும் கிடைக்கிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி முதல் அங்கு விற்பனை தொடங்க இருக்கிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் எதிர்பார்க்கலாம். அல்ட்ரா பிரீமியம் கேமரா பிரியர்களுக்கு இந்த விவோ எக்ஸ்200 போனானது பக்கா தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200 With 50MP Camera 12GB RAM 5800mAh Battery 90W Charging Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X