Home
Mobile

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. QHD+ டிஸ்பிளே.. ZEISS ஆப்டிக்ஸ்.. எந்த மாடல்?

இதுவரையில் வெளியான கேமரா போன்களை தூக்கி சாப்பிடும்படி சாம்சங் சென்சார் கொண்ட 200 எம்பி டெலிபோட்டோ கேமரா, சோனி சென்சார் கொண்ட மெயின் கேமரா மட்டுமல்லாமல், ஜீஸ் ஆப்டிகஸ் லென்ஸ் கொண்ட மாடலாக விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதியை விவோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த அறிமுக தேதியுடன் இந்த விவோ எக்ஸ்200 அல்ட்ரா போனின் மார்கெட்டில் கசிந்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும்படி வரும் ஏப்ரல் 21ஆம் தேதி மொபைல், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை விவோ நிறுவனம் களமிறக்க இருக்கிறது. ஆகவே, விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra), விவோ எக்ஸ்200எஸ் (Vivo X200s), விவோ பேட் 5 ப்ரோ (Vivo Pad 5 Pro), விவோ பேட் எஸ்இ (Vivo Pad SE) மற்றும் விவோ வாட்ச் 5 (Vivo Watch 5) வெளியாக இருக்கின்றன.

யாரு சாமி அவன்.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி மாடல்!

இதில் விவோ எக்ஸ்200 அல்ட்ரா மாடலானது ஒட்டுமொத்த கேமரா பிரியர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் கிடைப்பதால், மற்ற நாடுகளில் இருக்கும் கேமரா பிரியர்களும் இந்த மாடலுக்காக காத்திருக்கின்றன. ஏப்ரல் 21ஆம் தேதி சீனாவில் வெளியாகிய பிறகு குளோபல் மார்கெட் அறிமுகம் இருக்கும். அதையடுத்து இந்தியாவிலும் வெளியாக வாய்ப்புள்ளது.

விவோ எக்ஸ்200 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X200 Ultra Specifications): இந்த பிரீமியம் விவோவில் ஜீஸ் ஆப்டிக்ஸ், 200 எம்பி டெலிபோட்டோ கேமரா, 50 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ ஷூட்டர், சில்வர் மற்றும் ரெட் கலர் வேரியண்ட்கள் ஆகியவை மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்றவை மார்கெட்டில் கசிந்துள்ளன.

ஆகவே, குவாட்எச்டிபிளஸ் (QHD+) ரெசொலூஷன் கொண்ட 6.82 இன்ச் பிஓஇ எல்டிபிஓ (BOE LTPO) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த அமோலெட் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது.

மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி818 ( Sony LYT818) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஸ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் எச்பி3 (Samsung HP9) சென்சார் கிடைக்க இருக்கிறது. ஆப்டிகல் ஜூமிங், இன்-சென்சார் ஜூமிங் மற்றும் டிஜிட்டல் ஜூமிங் கிடைக்க இருக்கிறது.

இந்த விவோ எக்ஸ்200 அல்ட்ரா போனில் 6000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வர இருக்கிறது. மேலும், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. பிரீமியம் போன்களில் கிடைக்கும் IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் இந்த விவோ மாடலிலும் இருக்கிறது.

மேலும், கேமரா மற்றும் மல்டி-மீடியாவில் ஏஐ பீச்சர்களை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. 12 ஜிபி ரேம், 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி, 1 டிபி வரையில் வேரியண்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களையும் கொண்டிருப்பதால், இந்த போனின் ஆரம்ப விலை ரூ.89,999 பட்ஜெட்டில் இருக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X200 Ultra With 200MP Camera To Launch April 21 in China Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X