Home
Mobile

எல்லாமே மாறுது.. External லென்ஸ்.. 200எம்பி கேமரா.. அட்டகாசம் பண்ணும் Vivo.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் விவோ எஸ்200 அல்ட்ரா (vivo x200 ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் இந்த மாதம் இறுதியில் சீனாவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்பின்பு மற்ற நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவோ எஸ்200 அல்ட்ரா போன் எக்ஸ்டர்னல் லென்ஸ் (external lens) உடன் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது எக்ஸ்டர்னல் லென்ஸை (வெளிப்புற லென்ஸை) Zeiss உருவாக்கியுள்ளது என்றும். இது விவோ எஸ்200 அல்ட்ரா போனின் 200எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவுடன் இணைத்து பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அதுவும் இது 800மிமீ அல்லது 35x ஆப்டிகல் ஜூமை வழங்குகிறது என்று கூறப்படுகிறது. எக்ஸ்டர்னல் லெனஸ் உடன் விவோ எஸ்200 அல்ட்ரா போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

எல்லாமே மாறுது.. External லென்ஸ்.. அட்டகாசம் பண்ணும் விவோ! எந்த மாடல்?

விவோ எஸ்200 அல்ட்ரா அம்சங்கள் (vivo x200 ultra specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொண்டு வெளிவரும். புளூடூத் 5.4 ஆதரவு இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட
பல்வேறு சிறப்பன அம்சங்களுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகமாகும்.

6000mAh பேட்டரி வசதியுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.

குறிப்பாக 6.8-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே (2K LTPO OLED display)உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த விவோ எஸ்200 அல்ட்ரா போனில் உள்ளது. 24ஜிபி வரை மெமரி மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த விவோ எஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

எல்லாமே மாறுது.. External லென்ஸ்.. அட்டகாசம் பண்ணும் விவோ! எந்த மாடல்?

விவோ எஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் 50எம்பி சோனி எல்ஒய்டி-818 (Sony LYT-818) பிரைமரி கேமரா + 50எம்பி எல்ஒய்டி-818 அல்ட்ரா வைடு லென்ஸ் + 200எம்பி சாம்சங் எச்பி9 பெரிஸ்கோப் டெலிபோட்டோ (Samsung HP9 telephoto) லென்ஸ் என்கிற கேமராக்கள் உள்ளன.

குறிப்பாக விவோ எஸ்200 அல்ட்ரா போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த விவோ போனில் இருக்கும்.

photo credit: vivo, fonearena

Best Mobiles in India

English summary
vivo X200 Ultra to be launched with external lens: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X