மார்க்கெட்டே அதிர போகுது.. 200எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. வருகிறது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆண்டு விவோ எகஸ்200, எக்ஸ்200 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த அண்டு விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
குறிப்பாக விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X200 Ultra Specifications): 6.82-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ராஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி சோனி எல்ஒய்டி818 பிரைமரி கேமரா + 200எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர பல்வேறு அசத்தலான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டு வெளிவரும் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத் 5.4 ஆதரவு இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பன அம்சங்களுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகமாகும்.
6000mAh பேட்டரி வசதியுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். பின்ப இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: 91mobiles, JohnnyManuel


Click it and Unblock the Notifications