ரெடியா இருங்க.. 200எம்பி கேமரா.. ஸ்னாப்டிராகன் 8 Gen 4 SoC.. வருகிறது புதிய Vivo போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 14-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக 200எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X200 Ultra Specifications): 6.78-இன்ச் 2கே இ7 எல்டிஒபி அமோலெட் டிஸ்பிளே (E7 LTPO AMOLED display) வசதியுடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,440 x 3,200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 chipset) உடன் இந்த புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ், கேமிங் ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப் வசதிகளை தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்.
200எம்பி ட்ரிபிள் ரியர் கேமர அமைப்புடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் இந்த போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)ஆதரவுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
5500mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ போன்.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் CNY 6,499(இந்திய மதிப்பில் ரூ.74,500)-விலையில் அறிமுகம் செய்யப்படும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications








