Home
Mobile

மிரண்டு போன மார்க்கெட்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. வருகிறது தரமான விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ (vivo) நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தரமான கேமரா வசதியுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது வரும் ஏப்ரல் மாதம் இந்த விவோ எஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ எகஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

மிரண்டு போன மார்க்கெட்.. வருகிறது தரமான விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்200 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X200 Ultra Specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட் உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 6.8-இன்ச் 2கே ஒஎல்இடி டிஸ்பிளே (2K LTPO OLED display) உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 5000 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இந்த விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி எல்ஒய்டி818 பிரைமரி கேமரா + 200எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 50எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். இதுதவிர பல்வேறு அசத்தலான கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக 24ஜிபி வரை ரேம் மற்றும் 2டிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது.

மிரண்டு போன மார்க்கெட்.. வருகிறது தரமான விவோ 5ஜி போன்.. எந்த மாடல்?

குறிப்பாக IP69+IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டு வெளிவரும் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் புளூடூத் 5.4 ஆதரவு இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பன அம்சங்களுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகமாகும்.

விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் 6000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளது. குறிப்பாக இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credit: 91mobiles, JohnnyManuel

More from GizBot

Best Mobiles in India

English summary
vivo x200 ultra launch timeline: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X