மொத்த மார்கெட்டும் காலி.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 6000mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனை தூக்கி சாப்பிடும்படியான கேமரா பீச்சர்களுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) களமிறங்க இருக்கிறது. ஏற்கனவே, கசிந்த பீச்சர்களே எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இப்போது, வெளியீட்டுக்கு முன்பாகவே அதிகாரப்பூர்வமாக கேமரா பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுபோக டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த விவோ எக்ஸ்200 அல்ட்ரா போனின் வெளியீட்டு தேதி, உறுதி செய்யப்பட்ட பீச்சர்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் மூக்கில் விரல் வைக்க செய்யும்படியான பீச்சர்களுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா வெளியாக இருப்பதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. அதோடு ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம், சோனி சென்சார்கள், போட்டோகிராபி கிட் போன்ற பீச்சர்களின் விவரங்களும் மார்கெட்டில் கசிந்தன.

ஆனால், விவோ நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யாமல் இருந்தது. இப்போது, ஹான் போ சியாவோ, (விவோ தயாரிப்பு மேலாளர்) கேமரா பீச்சர்களை மட்டுமல்லாமல், பேட்டரி, டிஸ்பிளே போன்ற முக்கிய பீச்சர்களையும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து, கேமரா பிரியர்களை திக்குமுக்காட செய்துள்ளார். அப்படி என்ன பீச்சர்கள் இருக்கிறது?
14 எம்எம் போகல் லென்த் + சோனி எல்ஒய்டி818 (Sony LYT818) சென்சார் + ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 35 எம்எம் போகல் லென்த் + சோனி எல்ஒய்டி818 சென்சார் + ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 85 எம்எம் போகல் லென்த் கொண்ட 200 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கிடைக்கிறது.
இந்த ஜீல் ஆப்டிக்ஸ் கேமராவில் 3ஆவது ஜெனரேஷன் விசிஎஸ் பயோமெட்டிக் ஸ்பெக்ட்ரோஸ்காபி டெக்னாலஜி (VCS Biomimetic Spectroscopy Technology) கிடைக்கிறது. இதுபோக பிரீமியம் அவுட்புட் கொடுக்க ரியர் கேமராவில் வி3பிளஸ் மற்றும் செல்பீ ஷூட்டரில் விஎஸ்1 என்றும் பிரத்யேக கேமரா சிப்செட்கள் கிடைக்கின்றன.
இதுபோக பிரத்யேக கேமரா கிட் மூலம் ஸ்லைடிங் ஜூம், ஃபுல் ஃபிரஸ் ஷட்டர், அட்ஜெட்ஸ் எஸ்போசர், லாக் போகஸ், கன்டனியூஸ் ஷூட்டிங் போன்ற டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிகராக கன்ட்ரோல்கள் மற்றும் பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், 2K ரெசொலூஷன் மற்றும் ஆர்மர் கிளாஸ் (Armour Glass) புரொடெக்சன் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
6,000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. இந்த விவோ எக்ஸ்200 அல்ட்ரா போனில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.
இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இப்போது கசிந்த பீச்சர்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் வெளியீட்டு தேதியை பார்ப்போம். இந்த விவோ போனில் 6.82 இன்ச் டிஸ்பிளே, குவாட்எச்டிபிளஸ் ரெசொலூஷன் வர இருக்கிறது. சாம்சங் எச்பி3 சென்சார் டெலிபோட்டோவில் கிடைக்க இருக்கிறது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் வர இருக்கிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் மாடல்கள் வர இருக்கின்றன. அதேபோல 512 ஜிபி, 1 டிபி ஸ்டோரோஜ் மாடல்களும் கிடைக்க இருக்கின்றன. ரூ.89,999 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கலாம். ஏப்ரல் 21ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications