சாம்ராஜ்யமே மிரளுது.. 200MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படியான பீச்சரகளுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) மற்றும் விவோ வி200எஸ் (Vivo X200s) மாடல்கள் சீன மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. ஏப்ரல் 29ஆம் தேதி விவோ எக்ஸ்200 அல்ட்ரா விற்பனைக்கு வருகிறது. ஏப்ரல் 25ஆம் தேதி விவோ வி200எஸ் விற்பனை தொடங்க இருக்கிறது. இந்த மாடல்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
விவோ எக்ஸ்200 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X200 Ultra Specifications): இந்த அல்ட்ரா போனில் 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2K ரெசொலூஷன், 510 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் விவிட் (HDR Vivid), 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஆர்மர் கிளாஸ் (Armor Glass) சப்போர்ட் கிடைக்கிறது.

மேலும், 2160Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் ஐ புரொடெக்சன் டெக்னாலஜி (Eye Protection Technology) கிடைக்கிறது. ஆண்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 15 (Origin OS 15) கொண்ட லேட்டஸ்ட் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 எக்ஸ்ட்ரீம் எடிஷன் 3என்எம் (Octa Core Snapdragon 8 Extreme Edition 3nm) சிப்செட் கிடைக்கிறது.
35 எம்எம் போகல் லென்த் கொண்ட 50 எம்பி ஜீஸ் மெயின் கேமரா + 85 எம்எம் போகல் லென்த் கொண்ட 200 எம்பி ஜீஸ் ஏபிஓ டெலிபோட்டோ லென்ஸ் + 14 எம்எம் போகல் லென்த் கொண்ட 50 எம்பி ஜீஸ் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றுடன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி, 3.7X ஆப்டிகல் ஜூமிங், 105X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது.

8K வீடியோ ரெக்கார்டிங், 4K ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. போட்டோகிராபிக் கிட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி (சாட்டிலைட் எடிஷன்) மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி (போட்டோகிராபர் கிட்) ஆகிய வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
3டி அல்ட்ரா சோனிக் சிங்கிள்-பாய்ன்ட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த விவோ எக்ஸ்200 அல்ட்ரா போனில் 6000mAh பேட்டரி, 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. சில்வர் டோன் (Silver Tone), பிளாக் கா (Black Ka) மற்றும் ரெட் சர்க்கிள் (Red Circle) கலர்களில் கிடைக்கிறது.

விவோ எக்ஸ்200எஸ் அம்சங்கள் (Vivo X200s Specifications): இந்த விவோ போனிலும் ஆண்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு ஓர்ஜின்ஓஎஸ் 15 கிடைக்கிறது. இம்மார்டலிஸ் ஜி925 ஜிபியு (Immortalis G925 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9400+ 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9400+ 3nm) சிப்செட் கிடைக்கிறது.
5000 நிட்ஸ் பீக் பிரைட்ன்ஸ் கொண்ட 6.67 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கின்றன.

மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. விசி பயோனிக் (VCS Bionic) மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி ஜீஸ் சூப்பர் பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது.
இந்த விவோ எக்ஸ்200எஸ் போனில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங், 3X ஆப்டிகல் ஜூமிங், 100X டிஜிட்டல் ஜூமிங் மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது. 6200mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், அல்ட்ராசோனிக் சிங்கிள்-பாய்ன்ட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், (Ultrasonic Single-point Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor), லேசர் போகஸ் சென்சார் (Laser Focus Sensor) மற்றும் பிளிக்கர் சென்சார் (Flicker Sensor) கிடைக்கிறது.
மேலும், கலர் டெம்ப்ரேச்சர் சென்சார் மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor) கிடைக்கிறது. இந்த விவோ எக்ஸ்200எஸ் போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) பேக் செய்யப்பட்டுள்ளது. லைட் பர்பிள் (Light Purple), மின்ட் ப்ளூ (Mint Blue), ஸ்ட்ரெய்ட்பார்வேர்ட் ஒயிட் (Straightforward White) மற்றும் சிம்பிள் பிளாக் (Simple Black) கலர்கள் கிடைக்கின்றன.
விவோ எக்ஸ்200 அல்ட்ரா விலை (Vivo X200 Ultra Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.76,020ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.81,868ஆகவும், மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி (சாட்டிலைட் எடிஷன்) மாடலின் விலை ரூ.93,566ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி (போட்டோகிராபர் கிட்) மாடலின் விலை ரூ.1,13,451ஆகவும் இருக்கிறது.
விவோ எக்ஸ்200எஸ் விலை (Vivo X200s Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.49,115ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.51,455ஆகவும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.54,965ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.58,475ஆகவும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மாடலின் விலை ரூ.64,320ஆகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








