வெறித்தனமான 3 VIVO போன்கள்.. 200MP Periscope கேமரா, 6000mAh பேட்டரினு மிரட்டுது.. என்ன மாடல்கள்?
Vivo X200 Pro: விவோ நிறுவனத்தின் கீழ பல வகையான சீரிஸ் இருந்தாலும் கூட விவோவின் எக்ஸ் சீரீஸ்-க்கு "உலகளவில்" தனி மவுசு உள்ளது. ஏனென்றால் டிஎக்ஸ்ஓமார்க் ரேங்கிங்கில் (DXOMARK Ranking) ஆப்பிள், கூகுள் மற்றும் ஹூவாயின் பெஸ்ட் கேமரா போன்களுக்கு 'டஃப்' கொடுப்பது - விவோவின் எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் தான். இப்போதும் கூட டிஎக்ஸ்ஓமார்க்கின் டாப் ஸ்மார்ட்போன் பை கேமரா ஸ்கோர் (DXOMARK Top Smartphone by Camera Scorer) பட்டியலில் விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro) மாடல் உள்ளது!
இந்த அளவிற்கு மிகவும் பிரபலமான விவோவின் எக்ஸ் சீரீஸின் கீழ் அடுத்து மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவைகள் - விவோ எக்ஸ்200, விவோ எக்ஸ்200 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ பிளஸ். இந்த 3 மாடல்களையும் உள்ளடக்கிய விவோ எக்ஸ்200 சீரீஸ் ஆனது எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

விவோ எக்ஸ்200 சீரிஸ் எப்போது அறிமுகமாகும்? இம்மூன்று ஸ்மார்ட்போன்களை 2024 நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். அனைத்து மாடல்களுமே ஒரே வெளியீட்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படுமா அல்லது வெண்ணிலா மற்றும் ப்ரோ ஆகிய 2 மாடல்களும் ஒன்றாகவும்.. ப்ரோ பிளஸ் மாடல் தனியாகவும் அறிமுகம் செய்யப்படுமா என்பதில் தெளிவு இல்லை.
ஏனென்றால் விவோ எக்ஸ்200 ப்ரோ பிளஸ் (Vivo X200 Pro Plus) மாடல் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. விவோ எக்ஸ்200 (Vivo X200) ஆனது 6.3 இன்ச் டிஸ்பிளேவுடன் வரும் என்கிற தகவல் மட்டுமே லீக் ஆகியுள்ளது. ஆனால் விவோ எக்ஸ்200 ப்ரோவின் (Vivo X200 Pro) பல அம்சங்கள் லீக் ஆகியுள்ளன. அதன்படி, இது 1.5K 8T LTPO ஐசோ-டெப்த் மைக்ரோ குவாட்-கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டிருக்கும்,
விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது மெல்லிய பெஸல்களை (Slim-bezels) கொண்டிருக்கும் என்றும், அதில் அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (ultrasonic fingerprint scanner) இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா (200-megapixel periscope telephoto camera) ஆகியவற்றை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும்.
முன்னதாக வெளியான விவோ எக்ஸ்100 ப்ரோ மாடலின் 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவுடன் ஒப்பிடும்போது இது ஒரு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும். பேட்டரியை பொறுத்தவரை விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6000mAh பேட்டரியை பேக் செய்யலாம். ஒப்பிடுகையில் விவோ எக்ஸ்100 ப்ரோ மாடலில் 5400mAh பேட்டரி உள்ளது. இது ஐபி68 அல்லது ஐபி69 ரேட்டிங் ( IP68 or IP69 rating) நீர் மற்றும் தூசி எதிர்ப்பு மதிப்பீட்டுடன் வரலாம்.
கடந்தகால லீக்ஸ் தகவல்களின்படி விவோ எக்ஸ்200 சீரீஸி மீடியாடெக்கின் டைமென்சிட்டி 9400 சிப்செட் (MediaTek Dimensity 9400 chipset) இடம்பெறலாம். இந்த சீரீஸின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன விவோ எக்ஸ்200 மாடல் ஆனது 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து விவோ எக்ஸ்200 சீரிஸ் குறித்து வேறு எந்த தகவல்களும் இல்லை.
விவோ எக்ஸ்200 மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.69,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுகையில் உள்ள விவோ எக்ஸ்200 ப்ரோ மாடல் ஆனது ரூ.94,990 என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம்.


Click it and Unblock the Notifications