Home
Mobile

மிரண்டு போன மார்க்கெட்.. 200MP கேமரா.. 90W சார்ஜிங்.. 1டிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 14-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 ப்ரோ அம்சங்கள் (Vivo X200 Pro Specifications): 6.78-இன்ச் 1.5கே அமோலெட் டிஸ்பிளே (AMOLED Display) வசதியுடன் இந்த புதிய விவோ எக்ஸ்200 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,440 x 3,200 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மிரண்டு போன மார்க்கெட்.. 200MP கேமரா.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்..

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட்(MediaTek Dimensity 9400 chipset) உடன் இந்த புதிய விவோ எக்ஸ்200 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ், கேமிங் ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆப் வசதிகளைத் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட்

50எம்பி பிரைமி சோனி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார் + 200எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா இதில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவி V3+ இமேஜிங் சிப் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

குறிப்பாக 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய விவோ எக்ஸ்200 ப்ரோ போன் வெளிவரும். அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவுடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் தனித்துவமான ஆடியோ அம்சங்கள் இந்த போனில் இருப்பதாக விவோ நிறுவனம் கூறியுள்ளது.

6000mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. எனவே இந்த போனின் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

மிரண்டு போன மார்க்கெட்.. 200MP கேமரா.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்..

FunTouch OS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 5ஜி, வைஃபை 6, புளூடூத் வி5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ போன்.

குறிப்பாக விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகம் செய்யப்படும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும். அதேபோல் விவோ எக்ஸ்200 ப்ரோ போன் உடன் விவோ எக்ஸ்200 அல்ட்ரா, விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X200 Pro specifications leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X