Home
Mobile

Vivo-வின் புதிய Mini மாடல்.. 16GB ரேம், 50MP ட்ரிபிள் கேமரா, 5700mAh பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

இந்தியாவில், விவோ நிறுவனம் தனது மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் சீரீஸின் கீழ் ஒரு புதிய மினி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அது என்ன மாடல்? எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது - விவோ எக்ஸ்200 ப்ரோ மினி (Vivo X200 Pro Mini) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால், இதன் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை. இது எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? என்ன மாதிரியான பட்ஜெட்டில் இருக்கும்? என்பது மட்டுமே குழப்பம். அதற்கும் எங்களிடம் பதில் இருக்கிறது.

Vivo-வின் புதிய Mini மாடல்.. 16GB ரேம், 50MP ட்ரிபிள் கேமரா!

விவோ எக்ஸ்200 ப்ரோ மினி என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது (Vivo X200 Pro Mini Specifications)? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.31-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த சிப்செட் 16ஜிபி வரையிலான LPDDR5x ரேம் மற்றும் 1டிபி வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஆர்ஜின்ஓஎஸ் 5 (OriginOS 5) கொண்டு இயங்குகிறது. இது உலகளாவிய சந்தைகளில் பன்ட்ச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) உடன் வரலாம்.

கேமராக்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ்200 ப்ரோ மினி மாடல் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் OIS ஆதரவு உடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 119-டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்ட அல்ட்ராவைடு கேமரா மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகள் உள்ளன. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, ப்ளூடூத் 5.4, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ்-ஐ ஆதரிக்கிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட்டுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 90W (வயர்) மற்றும் 30W (வயர்லெஸ்) சார்ஜிங் ஆதரவுடன் 5,700mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68+IP69 ரேட்டிங்களும் உள்ளது

விவோ எக்ஸ்200 ப்ரோ மினி என்ன விலைக்கு வரும் (Vivo X200 Pro Mini Expected Price in India)? மாடல் பெயரில் "மினி" இருப்பதால், இதை மலிவான ஸ்மார்ட்போன் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இதன் விலை சற்று அதிகமாக இருக்கும். ஆனால் நிச்சயமாக இந்த சீரீஸில் உள்ள எக்ஸ்200 ப்ரோ மாடலை குறைவாக இருக்கும். விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போன் ரூ.65,999 க்கும், எக்ஸ்200 ப்ரோ ரூ.94,999 க்கு வெளியிடப்பட்டதை வைத்து பார்க்கும் போது மினி மாடலின் விலை ரூ.75,000 ஆக இருக்கலாம்.

விவோ எக்ஸ்200 ப்ரோ மினி எப்போது அறிமுகமாகும் (Vivo X200 Pro Mini India Launch Date)? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ராரின் கூற்றுப்படி (GSMArena வழியாக கிடைத்த தகவலின்படி), இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் 2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டிற்குள் அறிமுகப்படுத்தப்படும். இந்த தகவல் துல்லியமானதாக இருந்தால், இது 2025 ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே இந்திய சந்தையில் அறிமுகமாகலாம். மேலும் சீனாவிற்கு வெளியே அறிமுகமாகும் இந்த சீரீஸின் மூன்றாவது மாடலாகவும் இது மாறும். நினைவூட்டும் வண்ணம் விவோ எக்ஸ்200 சீரீஸ் கடந்த அக்டோபர் 2024 இல் சீனாவில் அறிமுகமானது.

Best Mobiles in India

English summary
Vivo X200 Pro Mini Will Launch in India by Q2 2025 Price Range Could be Around Rs 75000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X