இந்தியாவுக்கு வரும் புதிய Vivo போன்.. சோனி கேமரா.. 5700mAh பேட்டரி.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?
விவோ (vivo) நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி (Vivo X200 Pro mini) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது விவோ நிறுவனம்.
அதாவது விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போன் ஆனது கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் மட்டும் அறிமுகமானது. விரைவில் இந்த விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்200 ப்ரோ மினி அம்சங்கள் (Vivo X200 Pro mini Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 9400 சிப்செட் (Dimensity 9400 chipset) வசதி இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போனில் உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 6.31-இன்ச் 1.5கே ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதி கொண்டுள்ளது இந்த புதிய விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,440 x 3,200பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பிரைட்னஸ் வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
இந்த விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் 50எம்பி சோனி எல்ஒய்டி-818 மெயின் சென்சார் (Sony LYT-818 main sensor) + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமர செட்டப் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த விவோ போன்.
குறிப்பாக 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) ஆதரவு கொண்டுள்ளது விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போன். மேலும் தரமான ஆடியோ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
விவோ எக்ஸ்200 ப்ரோ மினி போனில் 5700mAh பேட்டரி உள்ளது. எனவே இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 15 சார்ந்த OriginOS 5 இயங்குதளம் விவோ எக்ஸ்200 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் உள்ளன. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ போன். மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் உள்ளது.


Click it and Unblock the Notifications








